பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

காதுகள், கேட்பினும் - ஓசையைக் கேட்பதாக இருந்தாலும் கேளா , கேட்காத, தகையவே - தன்மையானவையே

ஆகும்.

(க-ரை) கேள்வி ஞானத்தாலே துளைக்கப்படாத காதுகள் ஒசையினைக் கேட்பதாக இருந்தாலும் கேளாத . செவிடான தன்மை உடையனவே ஆகும்.

9. நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய

வாயின ராதல் அரிது. 419

(ப-ரை நுணங்கிய - நுண்ணியதாகிற, கேள்வியரி - கேள்வியினையுடையவர், அல்லார் அல்லாதவர்கள், வணங்கிய பணிவான வணக்கத்தினையுடைய, வாயினர் . சொல்லினையுடையவர். ஆதல் ஆகுதல், அரிது . கூடாத

தாகும்.

(க-ரை நுட்பமாக கேள்வி ஞானத்தினை உடையவ ரல்லாதவர்கள் வணக்கத்தினைக் காட்டுகிற சொற்களை

புடையவராதல் என்பது முடியாததாகும்.

10. செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என். 420

(ப.ரை) செவியின் - செவியால் அறிந்துணரும், சுவை. சுவைகளை, உணரா - அறியாமல், வாயுணர்வின் , வாயின் சுவை உணர்ச்சிகளையுடைய, |மாக்கள் - மாந்தர், அவியினும் - இறந்தாலும், வாழினும் - வாழ்ந்

தாலும், என் - என்ன பயனாகும்.

(கரை) செவிகளால் அறியப்படும் జీ) QI $6;G அறியாமல் வாய் உணர்வினை மட்டும் உடைய மாந்தரி இறந்தாலும் வாழ்ந்தாலும் ஆகும் பயன் யாது?