பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

அஞ்சுதல். அறிவார் - அறிவுடையோர்களது, தொழில். செயலாகும்.

(க-ரை) அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாதிருத்தல். அறியாமையாகும். அஞ்சவேண்டியதற்கு அஞ்சுதல். அறிவுடையோர்களது தொழிலாகும்.

9. எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை

அதிர வருவதோர் நோய். 429*

(ப-ரை எதிரதா- பின் வருவதனை முன்னறிந்து, காக்கும் - காத்துக் கொள்ளும், அறிவினார்க்கு - அறிவுடை. யோர்க்கு, அதிர - நடுங்கும்படியாக, வருவதோர் . வருவ. தொரு, நோய் இல்லை . துன்பம் இல்லை.

|க-ரை. இனி வரக்கூடியதனை முன்னமேயே அறிந்து, காத்துக் கொள்ளும் அறிவுடையோர்க்கு நடுங்கும்படியாக

வருவதொரு துன்பம் இல்லை.

10. அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர். 430,

(ப-ரை) அறிவுடையார் - அ றி வு ைட ய வ ர் க ள், எல்லாம் - வேறெதுவும் இல்லாதிருந்தாலும், உடையார் . எல்லாம் உடையவரேயாவார்கள், அறிவிலார் . அறிவில் லாதவர்கள், என் - எல்லாம், உடையரேனும் - உடையவ ராக இருந்தாலும், இலர் - ஒ ன் று ம் இல்லாதவரே ஆவார்கள்.

|க-ரை அறிவுடையவர்கள், வேறு பொருள்கள் எதுவும் இல்லாதிருந்தாலும், எல்லாம் உடையவர்களே யாவார்கள். அறிவில்லாதவர்கள் எல்லாப் பொருள்களும், உடையவர்களாகவே இருந்தாலும் ஒன்றும் இல்லாதவரி களேயாவார்கள்.