பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. குற்றங்கடிதல்

{குற்றங்கள் யாவை என்பதும் வாராமல் காத்தலும்)

1. செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்

பெருக்கம் பெருமித கீர்த்து. 431

(ப-ரை) செருக்கும் . மதம் என்பதும், சினமும் . கோப மும், சிறுமை - காமமும் [ஆகிய குற்றங்கள்) இல்லார் . இல்லாதவருடைய, பெருக்கம் - செல்வமானது, பெருமிதமேம்பாடான, நீர்த்து . தன்மையினையுடையதாகும்.

(கரை) செருக்கும் (மதமும்), கோபமும், காமமும் ஆகிய குற்றங்கள் இல்லாதவருடைய செல்வம் மேம் பர்டான தன்மையினை உடையதாகும்.

2. இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா

உவகையும் ஏதம் இறைக்கு. 432

(ப-ரை) இவறலும் - கொடுக்க வேண்டியதற்குப் பொருள் கொடாதிருத்தலும், மாண்பு - நன்மையின், இறந்த - நீங்கிய, மானமும் . மானமும், மாணா - அளவு கடந்த், உவகையும் - களிப்பும், இறைக்கு - மன்னனுக்கு, ஏதம் - குற்றங்கள் எனப்படும். -

(க-ரை) கொடுக்க வேண்டியவற்றிற்குப் பொருள் கொடாதிருத்தலும், நன்மையில் நீங்கிய மானமும், அளவு கடந்த உவகையும் அரசனுக்குக் குற்றங்களாகும்.

8. தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிகாணு வார். 433

(ப-ரை) பழி - பழிக்கு, நானுவார் . நாணமுற்று

அஞ்சுபவர்கள், தினைத்துணையாம் - தினையளவு

சிறிதான, குற்றம் குற்றமானது, வரினும் - தம்மிடத்தில்

தி. தெ.-13 -