பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

உண்டானாலும், (அதனை) பனைத்துணையா பனையி: னளவு பெரிதாக, கொள்வர் - கருதுவார்கள்.

(க-ரை பழிக்கு நாணமுற்று அஞ்சுபவர்கள் தினை யளவு சிறிதான குற்றமானது தங்களிடத்தில் உண்டானா லும் அதனைப் பனையளவு பெரிதாகக் கருதுவார்கள்.

4. குற்றமே காக்க பொருளாகக் குற்றமே

அற்றம் தரூஉம் பகை. 4菇

(ப-ரை) அற்றம் முடிவினை, தரூஉம் - தருவதான, பகை - பகை, குற்றமே - குற்றமேயாகும். (ஆதலால்) குற்றமே - அக்குற்றமானது வாராமல், பொருளாக . கருத்தாகக் கொண்டு, காக்க - தன்னைக் காத்துக் கொள்ளுதல் வேண்டும்.

(க.ரை முடிவினைத் தருவதாகிய பகை குற்றமே யாகும். ஆதலால் அக் குற்றம் தனக்கு வாராதிருப் பதனையே பயனாகக் கொண்டு காத்தல் வேண்டும்.

5. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்துறு போலக் கெடும். 435.

(ப-ரை வருமுன்னர் குற்றமானது வருவதற்கு முன்னதாகவே, காவாதான் - தன்னைக் காத்துக் கொள் ளாதவனுடைய, வாழ்க்கை - வாழ்க்கையானது, எரி . நெருப்பின், முன்னர் - முன்னே இருக்கும், வைத்துாறு . வைக்கோல் குவியலை, போல - போன்று, கெடும் - கெட்டு விடும்,

(க-ரை) குற்றம் வருவதற்கு முன்பாகவே தன்னைக் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை அக்குற்றம் வந்தால் நெருப்பின் முன்னே இருக்கும் வைக்கோவினனம். போல அழிந்துவிடும்.