பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

சிறந்தார் என்று கொள்ளுபவர்களைக் கெடுக்கும் பெருமை யுடைய பகைவர் யாவர் உளர்?

8. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் -

கெடுப்பார் இலானும் கெடும். 4 48.

iப-ரை இடிப்பாரை இல்லாத - தக்க நேரத்தில் இடித்துப்புத்தி சொல்லுபவர்களைத் தனக்குத்துணையாகக் கொள்ளாத, ஏமரா -பாதுகாவலற்ற, மன்னன். மன்னவன், கெடுப்பாரி - பகையாய்க் கெடுப்பவர், இலானும் . இல்லாவிட்டாலும், கெடும் . தானே கெட்டுவிடுவான்.

(கரை) நெருங்கிப் புத்தி சொல்லும் பெரியார்களைத் துணையாகக் கொள்ளாத காவலற்ற அரசன், பகையாய்க் கெடுப்பவர்கள் இல்லாவிட்டாலும் தானே கெடுவான்.

9. முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்

சார்பு இலார்க்கு இல்லை கிலை. v "... , , , 449.

(ப-ரை முதல் - முதற்பொருள், இலார்க்கு -இல்லாத வணிகர்க்கு, ஊதியம் . அதனால் வரும் இலாபம், இல் - இல்லையாகும், (அதுபோல) மதலையாம் - தம்மைத் தாங்குவதாகிய, சார்பு - துணை, இலார்க்கு - இல்லாதவர் களுக்கு, நிலை இல்லை - உறுதியான நிலைத்தல் என்பது இல்லை. -

(கரை) முதற் பொருள் இல்லாத வணிகர்களுக்கு அதனால் வரும் ஊதியம் இல்லையாகும். அதுபோலத் தம்மைத் தாங்குவதாம் துணை இல்லாதவர்களுக்கு, அதனால் வரும் உறுதியான நிலை இல்லையாகும். -

10. பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்ே

கல்லார் தொடர்கை விடல். 450.

- iப-ரை) பல்லார் . பலருடன், பகை - பகைமை, கொளலின் - கொள்ளுவதைவிட, பத்தடுத்த பத்துப்