பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

ஆண்டுகள் கழித்து பரிமேலழகர் உரை எழுதி இருக் கின்றார். ஆகையினால் பரிமேலழகர் காலத்தின் சூழ்நிலை களினால் பொதுமறையாகிய திருக்குறளுக்குப் பல இடங் களில் தவறான முறையில் விளக்கம் தருகின்றார்.

எல்லாக் காலத்திற்கும், எல்லா மக்களுக்கும், பொதுத் தன்மையில் திருவள்ளுவர் அமைத்து இருக்கின்ற குறட்பாக் களுக்கு சாதி, மதம், சமயம் வருணம் என்பன போன்ற சொற்களைப் பரிமேலழகர் பற்பல இடங்களில் சொல்லு கின்றார். அவற்றுள் ஒன்றிரண்டு குறிப்பிடலாம்.

"அதுதான் நால்வகை நிலைத் தாய், வருணந்தோறும் வேறுபாடு உடைமையின். ' -

  • அஃதாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஒதப்பட்ட ஒழுக்கத்தினையுடையவர் ஆதல.'"

இவ்வாறு பல இடங்களில் உரையாசிரியர் பரிமேலழகர் குறிப்பிட்டுச் சொல்லுவது பொருந்தாக் கூற்று ஆனபடி யால் அவைகள் நீக்கப்படுதல் வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

திருக்குறளில் 'இல்வாழ்க்கை' என்ற அதிகாரம், இல்லறத் தலைவனாகிய கணவனுடைய சிறப்பினையும், கடமைகளையும் கூறுவதாகும். இந்த அதிகாரத்தில் முதலாவதாகச் சொல்லப்பட்டிருக்கும் குறட்பாவினைச் சிந்திக்க வேண்டும்.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

கல்ஆற்றின் கின்ற துணை.' இல்லறத் தலைவன் தன்னுடன் இயல்பாகவே இருந்து வருபவர்கள்ாகிய பெற்றோர், மனைவி, மக்கள் என்ற மூன்று வகையினருக்கும் நல்ல நெறியில் நின்று கடமையாற்ற வேண்டும் என்பதே இக்குறட்பாவின் பொருளாகும். இக் குறட்பாவுக்கு விளக்கம் சொல்லுகின்ற பரிமேலழகர், பிரம்மச்சரியம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் ஆகிய மூன்று ஆசிரமத்தில் இருப்பவர்களுக்குத் துணையாக