பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

மட்டும் சுவைத்து உண்ணத் தெரியும். செவியினால் நற்கருத்துக்களைக் கேட்கிற பழக்கம் இல்லாத மக்களை ஆசிரியர் வன்மையாகவும் கடுமையாகவும் கண்டித்துக் குறட்பா தருகின்றார்.

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என். (420).

திருவள்ளுவர் நமக்கு வழங்கியுள்ள உலகப் பொது மறையில் ஒவ்வொரு குறட்பாவினையும் பன்முறையும் சிந்தித்துத் தெளிதல் வேண்டும். எவ்வளவுதான் கல்வி கற்று அறிவு பெற்றிருந்தாலும் உலகத் தோடு பொருந்த வாழ்கின்ற முறையினை இன்றியமையாத கடமையாகத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார். (140).

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு. (426) செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல். (637)

உலகப் பொதுமறையாகிய திருக்குறளுக்கு உரை யாசிரியர்கள் பலர் உண்டு. அவர்களில் மிகச் சிறந்த, உரையாசிரியராகப் பரிமேலழகர் போற்றப்படுகின்றார். பரிமேலழகர் மிகச் சிறந்த இலக்கணப் புலமை நிறைந்த விற்பன்னர் ஆவார். அவருடைய உரைவிளக்கத்தில் இலக்கணச் செறிவும் ஆழ்ந்த பொருள் நுட்பமும் நிறைந்து இருக்கின்றனவென்று பேரறிஞர்கள் சொல்லுகிறார்கள்.

திருவள்ளுவர் சற்றேறக்குறைய இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்னர் வாழ்ந்தார் என்று வரலாறுகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. திருக்குறள் எழுதப்பட்டு ஆயிரம்