பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

பிறந்து வாழ்ந்து வருகின்ற குடிமக்களுக்குத் தொண்டு செய்யவேண்டும் என்பதனை இந்த அதிகாரம் விளக்கிக் கூறகின்றது. நடைமுறையில் பொதுத் தொண்டு என்ற சொல்லினால் மக்களுக்குத் தொண்டாற்றுகின்ற செயலினைக் குறிப்பிடுகின்றோம். மக்களுக்குத் தொண்டு: செய்பவனை உலக மக்கள் அனைவரும் பாராட்டுவார்கள் என்பது குறிப்பானதொரு செய்தியாகும்.

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு. (1025).

குடிமக்களுக்குத் தொண்டு செய்பவர்கள் உலக வழக்கில் பேசுவதுபோல் மானம் மரியாதையைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்று குறிப்புக் காட்டுகிறார். நேரம் காலத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. என்று உணர்த்துகின்றார். நன்கு சிந்திக்க வேண்டும்.

குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும். (1028),

உயர்ந்த பிறவியாகிய மானிடப் பிறவியைப் பெற்று நாட்டுக்கும் மக்களுக்கும் பயனுடையவர்களாக வாழ. வேண்டும். அவ்வாறு பயனுள்ளவர்களாக வாழ்கின்ற மக்களுக்கு உலக மக்களே பாராட்டு விழா நடத்துவார்கள் என்பது குறிப்பாக உணர்த்தப் பெற்றது.

கயனொடு கன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு. (994).

மக்கள் பிறவி எடுத்தவர்களுக்கு இருக்க வேண்டிய உயர்ந்த பண்புகளிலே கேட்கின்ற பழக்கத்தினை வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல கருத்துக்களை ஐம்பொறிகளிலே ஒன்றாகிய செவிகளினால் கேட்கின்ற உயர்ந்த பழக்கம் வளர்க்கப் படவேண்டும். வாயினால்