பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

வைத்துக் கொண்டு வெளிப்பகட்டாகச் செய்யப்படும் செயல்களெல்லாம் பயனற்றவைகளாகும். அவைகளை ஆரவாரத்தன்மை உள்ளவை என்று ஆசிரியர் கூறு கின்றார்.

மனத்திலே உண்டாகக் கூடிய தீய குணங்கள் எண்ணில் மிகுந்தவைகளாகும். அவைகளை எல்லாம் முதற் காரண மான நான்கு தீயகுணங்களில் அடக்கி ஆசிரியர் குறள் செய்து அமைக்கின்றார்.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். (35)

மேலே சொன்ன இரண்டு குறட்பாக்களும் அறம் இன்னதென்பதனை மிகத் தெளிவாக விளக்கம் செய்து விட்டன. அத்தகைய அறத்தன்மை கொண்டவர்களை அந்தணர்கள் என்று ஆசிரியர் வள்ளுவனார் அழைக் கின்றார். அவர்களையே அறவோர் என்றும் வழங்கு கின்றோம்.

அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான். (36)

முதல் அதிகாரமாக, கடவுள் வாழ்த்து திருக்குறளில் அமைந்துள்ளது. இறைவன் என்ற பெயருக்கு விளக்கம் ஒழுக்கத்தின் சிறப்பு, வழிபாட்டு முறை இன்ன பிற அனைத்தும் முதல் அதிகாரத்தில் காண முடிகின்றது. மேலே குறிப்பிட்ட அறம் என்ற சொல்லினையும் அந்தணன் என்ற சொல்லினையும் அமைத்துக் குறட்பா ஒன்றில் ஆசிரியர் சிறப்பாக விளக்கம் தருகின்றார்.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது. (8)

குடிசெயல்வகை என்ற பெயரில் அருமையான அதிகாரம் ஒன்று திருக்குறளில் காணப்படுகின்றது. தான்