பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

தற்கு அருமையான, பொருள் - பொருள் என்று யாதொரு பொருளும், இல் - இல்லை.

க-ரை) தாம் தெரிந்து கொண்ட இனத் துடனே செய்யத்தகும் தொழிலினை ஆராய்ந்து எண்ணிச் செய்து முடிக்க வல்லவர்களுக்கு அடைவதற்கு அரிய பொருள் யாதொன்றும் இல்லை.

3. ஆக்கம் கருதிமுதல் இழக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடை யார். 463 (ப.ரை) அறிவுடையார் - அறிவு நிறைந்தவர்கள், ஆக்கம் . பிறகு வரக்கூடிய ஊதியத்தினை, கருதி - எண்ணி, முதல் இழக்கும் முதலாக வைத்துள்ளதை இழப்பதற்குக் காரணமான, செய்வினை - தொழிலினை, ஊக்கார் . செய்ய நினைக்க மாட்டார்கள்.

|க-ரை) பின்பு வரக்கூடிய ஊதியத்தினைக் கருதி முன்பு பெற்றுள்ள முதலினையும் இழப்பதற்குக் காரண மான தொழிலினை அறிவுடையோர் மேற்கொள்ள மtrட்டார்கள்,

4. தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவு என்னும்

ஏதப்பாடு அஞ்சு பவர். 464、 (ப-ரை) இளிவு - தமக்கு:இழிவு, என்னும் - என்கின்ற, ஏதப்பாடு - குற்றம் உண்டாவதற்கு, அஞ்சுபவர் - அஞ்சு பவர்கள், தெளிவு இலதனை - ஆய்ந்து முடிவு செய்யப். படாத தொழிலினை, தொடங்கார் - செய்வதற்குத் தொடங்கமாட்டார்கள்.

(க-ரை) தமக்கு இழிவு எனப்படும் குற்றம் உண்டா வதற்கு அஞ்சுபவர்கள், இனத்துடனும் தனித்தும் ஆராய்ந்து, துணியப்படாத தொழிலைத் தொடங்க மாட்டார்கள்.

5. வகைஅறச் சூழாது எழுதல் பகைவரைப்

பாத்திப் படுப்பதோர் ஆறு. 465 (ப-ரை வகை . வழிமுறைகளை யெல்லாம், அ றமுழுவதும், குழாது - எண்ணிப் பாராமல் , எழுதல் - வினை