பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207

மேற் செல்லுதல் பகைமேற் செல்லுதல்; பகைவரை . அப்பகைவர்களை , பாத்தி - தானாக வளர்கின்ற நிலத்திலே, படுப்பது - நிலைத்து நிற்கச் செய்கின்ற, ஒர் . ஒரு, ஆறு - வழியாகும்.

|கடரை வினைமேல் சென்றால் நிகழும் திறங்களை யெல்லாம் முழுவதும் எண்ணாமல் சிலவற்றை எண்ணிய வுடனே தொழில்மேல் செல்லுதல், பகைவரை வளரும் நிலத்திலே நிலைபெறச் செய்யுமொரு வழியாகும்.

6. செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும், 466

|ப-ரை) செய்தக்க அல்ல - செய்யக் கூடாது செயல்களை, செயக் கெடும் செய்வதால் கெட்டு விடுவான் , செய் - செய்ய, தக்க தகுந்த செயல்களை, செய்யாமையானும் - செய்யாதிருப்பதாலும், கெடும் . கெட்டுவிடுவான்.

(கரை) தான் செய்யக் கூடாத செயல்களைச் செய் வதால் ஒருவன் கெட்டுவிடுவான். செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாதிருப்பதாலும் கெட்டு விடுவான்.

7. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு. 467

|ப-ரை) கருமம் - தொழிலினை, எண்ணி முடிக்கும் திறத்தினை நன்கு எண்ணிப் பார்த்து, துணிக - தொடங்கு. தல் வேண்டும், துணிந்தபின் - தொழிலினை. தொடங்கிய பிறகு, எண்ணுவம் - முடிக்கும் திறத்தினை எண்ணுவோம், என்பது இழுக்கு - என்று சிந்திப்பது குற்றமேயாகும்.

(க-ரை தொழிலினை, முடிக்கும் திறத்தினை நன்கு.

எண்ணிப் பார்த்துத் தொடங்க வேண்டும். தொழிலினைத்

தொடங்கிய பிறகு முடிக்கும் திறத்தினை எண்ணுவோம்.

என்பது குற்றமேயாகும்.