பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213

10. உளவரை தூக்காத ஒப்புரவு ஆண்மை

வளவரை வல்லைக் கெடும். 48s).

(ப-ரை) உளவரை - தனக்குள்ள அளவினை, தூக்காதஆராய்ந்தறியாமல், (செய்யப்படும் ஒப்புரவாண்மை . உபகாரமுடைமை என்னும் தன்மையால், வளவரை . ஒருவனுடைய செல்வத்தின் அளவு, வல்லை . சீக்கிரம், கெடும் . கெட்டுவிடுவதாகும்.

|க-ரை) தணக்குள்ள அளவினை ஆராய்ந்தறியாமல் ஒப்புரவாண்மையெனும் உபகாரம் செய்பவனுடைய செல்வத்தின் அளவு விரைவாகக் கெடும்.

49. காலம் அறிதல் (காலத்தின் அருமையினைக் கூறுதல்

1. பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. 48]

(ப-ரை! கூகையை - தன்னைவிட வலிமையுள்ள கோட்டானை, காக்கை - காகமானது, பகல் - பகற்பொழு தினில், வெல்லும் - வென்றுவிடும், (அது போல) இகல் - பகைவர்களது பகைமையினை, வெல்லும்.வெல்லக் கருதும், வேந்தர்க்கு - வேந்தர்க்கு, பொழுது வேண்டும் . அதற்குத் தகுந்த காலம் இன்றியமையாது வேண்டப்படுவதாகும்.

(கரை) தன்னைவிட வலிமையுள்ள (கூகைவை). கோட்டானைக் காக்கையானது பகற்பொழுதில் வென்று விடும். அதுபோலவே, பகைவரை வெல்லக் கருதும் அரசர்க்கு அதற்கேற்ற காலம் இன்றியமையாததாகும்.