பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

வாக, புறம் - புறத்திலே, வேரார் . அவர் அறிய கோபிக்க மாட்டார், காலம் - தக்க காலத்தினை, பார்த்து - பார்த். திருந்து, உள்வேர்ப்பர் அது வரும் வரை உள்ளுக்குள்ளேயே வெகுள்வர்.

|க-ரை) அறிவுடைய அரசர் பகைவர் தீமை செய்த அப்போதே புறத்தில் தெரியுமாறு கோபம் செய்ய மாட்டார்கள். வெல்லுதற்கேற்ற காலம்வரை உள்ளுக் குள்ளேயே கோபத்தினை வைத்திருப்பர்.

8. செறுகரைக் காணின் சுமக்க இறுவரை

காணின் கிழக்காம் தலை. 488

(ப-ரை) செறுநரை - பகைவர்களை, காணின் . காணுங்கால், சுமக்க . காலம் வரும் வரை பணிவுடன் இருத்தல் வேண்டும், இறுவரை - இறுதிக்காலம், காணின் வந்து முடியும் போது, கிழக்காம்தலை - அப்பகைவர் தலை கீழாகிக் கெடுவர்.

(கரை) தாம் வெல்லக் கருதினால் பகைவருக்கு. இறுதிக்காலம் வரும் வரை அவரைக் கண்டால் பணிக; பணியவே அந்தக் காலம் வந்து முடியும்போது அப்பகைவர் தலை கீழாவார்.

9. எய்தற்கு அரியது இயைந்தக்கால் அங்கிலையே

செய்தற்கு அரிய செயல். 489.

(ப-ரை எய்தற்கு - அடைதற்கு, அரியது . அரியதான

காலம், இயைந்தக்கால்-வந்து கூடிய போது, அந்நிலையே. அக்காலம் நிற்கும் அளவுக்குள்ளே, செய்தற்கு . செய்வதற்கு, அரிய - அருமையான, செயல்களை செயல். செய்து கொள்ளுதல் வேண்டும்,

|க-ரை; பகைவரை வெல்லுவதற்குப் பெறுதற்கரிய காலம் வந்து கூடியபோது, அக்காலம் கழிவதற்கு முன்பே செப்தற்கு அரிய தொழில்களைச் செய்து கொள்ளுவார் 遭鲁呼鹃蕊。