பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215.

வாராயின், உலகு முழுவதையும் ஒருவன் ஆள நினைத்த லும் அது முடியும். : ; }

5. காலம் கருதி இருப்பர் கலங்காது - -

ஞாலம் கருது பவர். 485

(ப-ரை கலங்காது - தவறாமல், ஞாலம் - பூமி முழு வதையும். கருதுபவர் கொள்ளக் கருதும் அரசர், காலம் - அதற்கேற்ற காலத்திளையே, கருதி இருப்பர்-சிந்தித்து அது வருமளவும் காத்திருப்பர்.

(க-ரை தவறாமல் பூமி முழுவதையும் கொள்ளக் கருதும், அரசர், தமக்கு வலிமை அதிகமாக இருந்தாலும் அத்ற்கேற்ற காலத்தினையே சிந்தித்து அது வருமளவும் காத்திருப்பர்.

8. ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் -

தாக்கற்குப் பேரும் தகைத்து. 486 - (ப-ரை) ஊக்கம் - ஊக்கம், உடையான் - வலிமை யுடையவன், ஒடுக்கம் - பகை மேற் செல்லாமல் காலம் பார்த்து ஒடுங்கி இருப்பதானது, பொரு - போரினைச் செய் கின்ற, தகர் - ஆட்டுக்கடா. தாக்கற்கு - தாக்கிப் பாய்வதற் காக, பேரும் - பெயர்ந்து செல்லும், தகைத்து - தன்மைய தாகும்.

(க-ரை வலிமை மிகுதியுடைய மன்னன் பகைமேற் செல்லாமல் காலம் பார்த்திருக்கின்ற செய்கை எப்படிப்பட்ட த்ென்றால், போர் செய்கின்ற ஆட்டுக்கடா மிகுந்த வேகத்துடன் தாக்குவதற்குக் கால்களைப் பின்வாங்கும் தன்மையதாகும். - - - - -

7. பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து

உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். 487

(ப-ரை ஒள்ளியார் -அறிவு நிறைந்தவர்கள். ஆங்கே. பகைவர் தீமை செய்த அப்பொழுதே, பொள்ளென - விரை