பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

2 முரண் சேர்ந்த மொய்ம்பின் அவர்க்கும் அரண்சேர்ந்துஆம் ஆக்கம் பலவும் தரும். 492

(ப-ரை) முரண் சேர்ந்த மாறுபாட்டோடு கூடிய, மொய்ம்பினவர்க்கும் - வலிமையுடையவர்க்கும், அரண் சேர்ந்து-கோட்டையினைச் சேர்ந்து, ஆம்-ஆகின்ற, ஆக்கம்செல்வாக்கானது, பலவும் தரும் - பற்பல பயன்களையும் தருவதாகும்.

(க-ரை) மாறுபாட்டுடன் கூடிய மறத்தினையுடைய வலிமை நிறைந்த அரசர்க்கு அரசினைச் சேர்ந்து ஆகின்ற

ஆக்கம் பற்பல பயன்களைக் கொடுப்பதாகும்.

3. ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து

போற்றார்கண் போற்றிச் செயின். 493

(ப-ரை இடன் அறிந்து- அதற்குத் தகுந்த இடத்தினை யறிந்து, போற்றி . தம்மைக் காத்து கொண்டு, போற்றார் கண் - பகைவரிடம், செயின் - வினையினைச் செய்வார் களானால், ஆற்றாரும் வலிமையில்லாதவர்களும்: ஆற்றி வலிமையுடையவராகி, அடுப் - வெல்லுவார்கள்.

(க-ரை) வலிமை இல்லாதவர்களும் வலிமையுடைய வர்ாகி வெல்லுவார்கள். எப்போது என்றால், அதற்குத் தகுந்த இடத்தினை அறிந்து, தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடம் வினைகளைச் செய்வார்களானால் என்பதாம்.

4. எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன் அறிந்து

துன்னியார் துன்னிச் செயின். 494

(ப. ரை) இட னறிந்து - தக்க இடத்தினை அறிந்து கொண்டு, துன்னியார் - செய்த மன்னர், துன்னி.அரணைப் பொருந்தி நின்று, செயின்-தொழிலினைச் செய்வாரானால், எண்ணியார் . வெல்லக் கருதிய பகைவர், எண்ணம் இழப்பர் . அந்த எண்ணத்தினை இழந்து விடுவார்கள்.