பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

2. குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்

காணுடையான் கட்டே தெளிவு. 507:

ப-ரை குடிப்பிறந்த நற்குடியிலே பிறந்து, குற்றத்தின் - குற்றங்களிலிருந்து, நீங்கி - நீங்கி, வடு . குற்றம் உண்டாகுமோ என்று, பரியும் - அஞ்சுகின்ற, நானுடையான கட்டே-நாண முடையனிடத்தில், தெளிவு. அரசனுக்குத் தெளிவு உண்டாவதாகும். .

(கரை) உயர்ந்த குடியில் பிறந்து குற்றங்கன் இல்லாமல் நமக்குக் கெடுதி வருமோ என்று ஆகுை தானுகின்றவனைத் தேர்ந்து அமைத்துக் கொள்ளுவதே தலைவனுக்குத் தெளிவாகும். , , ,

3. அரியகற்று ஆசு அற்றார் கண்ணும் தெரியுங்கால் . . .

இன்மை அரிதே வெளிறு, 503.

|ப-ரை) அரியகற்று - சிறந்த அருமையான நூல் களைக் கற்றறிந்து, ஆசு - குற்றங்கள், அற்றார் - இல்லாத வர்கள், கண்ணும்-இடத்திலும், தெரியுங்கால் - நுட்பமான ஆராயும் போது, வெளிறு - அறியாமையென்பது, இன்மை. இல்லாதிருப்பது, அரிது - அருமையேயாகும்.

(க-ரை) சிறந்த அருமையான நூல்களைக் கற்றறிந்து குற்றங்கள் எதுவும் இல்லாதவரிடத்திலும் நுட்பமாக. ஆராய்ந்து பார்த்தால் அறியாமையென்பது இல்லா திருப்பது அருமையேயாகும். • * :

4. குணம்காடிக் குற்றமும் காடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல். ' 3 504.

ப-ரை) குணம்நாடி - ஒருவனுடைய நற்குணங்: களையும் ஆராய்ந்தறிந்து, குற்றமும் நாடி-ஏனைய குற்றகி களையும் ஆராய்ந்தறிந்து, அவற்றுள் - அந்த இருவகை களிலும், மிகை-மிகுதியாக இருப்பவற்றை, நாடி-ஆராய்ந்து