பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221

10. கால்ஆழ் களரின் கரிஅடும் கண்ணஞ்சா

வேலாள் முகத்த களிறு. 500

(ப-ரை) கண்ணஞ்சா - பாகர்க்கு அடங்காதவை வேலாள் - வேலினையுடைய ஆட்களை, முகத்த - கோத்த கொம்பினையுடையவையாயும் உள்ள, களிறு - யானை களை, கால் - கால்கள், ஆழ் - புதைகின்ற அளவுள்ள, கனரில் . சேற்று நிலத்திலே, நரி அடும் . நரிகள் கொன்று விடும்.

(க-ரை) பாகரிக்கு அடங்காததாயும், வேலினையுடைய ஆட்களைக் கோத்த கொம்பினையுடைய வாயுமுடைய் யானைகளை, அவை கால் புதைகின்ற அளவுக்குச் சேற்று நிலத்தில் அகப்பட்டுக் கொண்டால் நரிகள் கொல்லும்,

51. தெரிந்து தெளிதல்

|அமைச்சர் முதலியவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைகள்)

1. அறம்பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின்

திறம்தெரிந்து தேறப் படும். 501

(ப-ரை: அறம் - அறமும், பொருள் - பொருளின், இன்பம் - இன்பமும், உயிரெச்சம் - உயிர்க் காரணமாக வரும் அச்சமும், (ஆகிய நான்கின் - நான்கு வகையான், திறம் தெரிந்து திறத்தினால் மனத்தின் இயல்பு அறிந்து, தேறப்படும் - தெளியப்படுவான்.

(கரை) அரசன் தெளியப்பட வேண்டிய ஒருவன்.

அறம், பொருள், இன்பம், உயிர் அச்சம் ஆகிய நான்கு

வகைகளினால் மனத்தின் தன்மையினைத் தெளிந்து தேர்ந்து அறிந்து கொள்ளப்படுவான். -