பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

வேண்டுவனவற்றை, அறியாதவர்களை, தேறுதல் . தெரிந்து கொள்ளுவது, பேதைமை . அறிவற்ற தள்மை யினை, எல்லாம் தரும் எல்லாம் கொடுக்கும்.

|க-ரை) அன்புடையவர்கள் என்பதனைக் காரண மாகக் கொண்டு, தாம் அறிய வேண்டுவனவற்றை அறியா தவரிகளைத் தேர்ந்தெடுத்தல் அரசனுக்கு எல்லா அறியாமையினையும் கொடுக்கும்.

8. தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை

தீரா இடும்பை தரும். - 508 |ப-ரை; பிறனை-தன்னுடன் தொடர்பில்லாதவனை, தேரான் - ஆராய்ந்து பார்க்காமல், தெளிந்தான் .

தெளிந்த மன்னனுக்கு, வழிமுறை - தனது பரம்பரையான வழிமுறையெல்லாம், தீரா இடும்பை . நீங்காத துன்பத் தினை, தரும் - கொடுக்கும்.

(க-ரை தன்னுடன் தொடர்பு இல்லாதவனை ஆராயாமல் தெளிந்த (தேர்ந்து கொண்ட) அரசனுக்கு அச்செயல் அவன் சந்ததி முறையிலும் நீங்காத துன்பத் தினைக் கொடுக்கும்.

9. தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்

தேறுக தேறும் பொருள். 509

|ப-ரை யாரையும் - எவரையும்,தேராது - ஆராய்ந்து கொள்ளாமல், தேறற்க . தெளியாதிருப்பானாக, தேர்ந்த, ஆராய்ந்த, பின் பிறகு, தேறும் - தெளியப்படுகின்ற, பொருள் - பொருள்களை, தேறுக - ஐயுறாமல் தெளிதல் வேண்டும்.

க-ரை) யாரையும் ஆராய்ந்து பாராமல் தெளிய வேண்டா, ஆராய்ந்த பின் தெளியப்படும் பொருள்களை

ஐயுறாமல் (சந்தேகிக்காமல்) தெளிதல் வேண்டும்.