பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225

10. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரன் இடும்பை தரும். - 510

(ப-ரை) தேரான் - யாரையும் ஆராயாமல், தெளிவும் தெளிந்து கொள்ளலும், தெளிந்தான் கண் - ஆராய்ந்து தெளிந்து கொண்டவனிடத்தில், ஐயுறவும் . சந்தேகம் கொள்ளுதலும், தீரா - நீங்காத, இடும்பைதரும் - துன்பத் தினைத் தருவதாகும்.

(கரை) மன்னன் யாரையும் ஆராயாமல் தெளிதலும் ஆராய்ந்து தெளிந்த பிறகு தெளியப்பட்டவனிடத்தில் ஐயப்படுதலும் ஆகிய இவ்விரண்டும் அவனுக்கு நீங்காத துன்பத்தினைக் கொடுக்கும்.

52. தெரிந்து வினையாடல் (தெளியப்பட்டவர்களை ஆளுகின்ற திறன்)

1. நன்மையும் தீமையும் காடி கலம்புரிந்த -

தன்மையான் ஆளப் படும். 511

(ப-ரை) நன்மையும் - ஆகும் தொழிலினையும், தீமை யும் . ஆகாதனவாகிய தொழிவினையும், நாடி - நன்கு ஆராய்ந்து கண்டு, நலம் - அவற்றில் முடியக் கூடியவை களை, புரிந்த தெரிந்து விரும்பிய, தன்மையான் . தன்மையுடையவன், ஆளப்படும் . அரசனாலே அத் தொழில்களில் ஆளப்படுவான்.

(கரை) தலைவன் தொழிலினைத் தன்னிடத்தில் வைத்தால் ஆவனவும் ஆகாதனவுமாகிய தொழில்களை ஆராய்ந்தறிந்து அவற்றுள் ஆவனவற்றையே விரும்பும் இயல்புடையான், அரசனால் சிறந்த தொழில்களில் ஆளப் படுவான். . -

தி.தெ.-13