பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227

யினால், வேறாகும் . மாறிவிடுகின்ற, மாந்தர் பலர் . மாந்தர் பலர் உலகத்தில் உண்டு.

(கரை) எல்லா வகையிலும் ஆராய்ந்து தெளிந்து தொழிலில் வைத்த பின்னும், அத்தொழிலின் தன்மை யால் வேறுபடும் மாந்தர் உலகத்தில் பலருண்டு.

5. அறிந்துஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்

சிறந்தான்என்று ஏவற்பாற் றன்று. 5 : 5 (ப-ரை) அறிந்து ஆராய்ந்தறிந்து, ஆற்றிய இடையில் வரும் துன்பங்களைத் தாங்கி, செய்கிற்பாற்கல்லால் . செய்து முடிக்கும் வல்லவனையல்லாமல், வினைதான் - அத் தொழில் என்பதனை, சிறந்தான் - இவன் நம்மிடத்தில் அன்புடையவன் என்று நினைத்து, ஏவல்.தொழிலின் மேல் அவனை ஏவுகின்ற, பாற்று - தன்மையுடையது, அன்று . தொழிலல்ல.

(க-ரை தொழிலினைத் தக்கபடி ஆராய்ந்தறிந்து முடிவு செய்து வல்லவனையல்லாமல், இவன் நம்மிடத்தில் அன்பு உள்ளவன்' என்ற காரணத்தினால் தொழிலின்மேல் ஒருவனை அமர்த்தும் தன்மை கூடாது,

8. செய்வானை காடி வினைகாடிக் காலத்தோடு

எய்த உணர்ந்து செயல். 516

(ப-ரை) செய்வானை நாடி முதலில் தொழில் செய் பவன் இலக்கணத்தினை ஆராய்ந்தறிந்து, வினைநாடி . அத்தொழிலினுடைய தன்மையினை ஆராய்ந்தறிந்து, காலத்தோடு-காலத்தினையும் பொருத்திப் பார்த்து, எய்த உணர்ந்து . பொருத்தமுற அறிந்துணர்ந்து, செயல் - தொழிலில் அவனை நடத்துதல் வேண்டும்.

(கரை) முதலில் தொழில் செய்பவனுடைய இலக் கணத்தினை ஆராய்ந்து, செய்யப்படும் தொழிலினுடைய இயல்பினை ஆய்ந்து, பிறகு தாமே தக்க காலத்தினைத் தெரிந்து அவனை அத்தொழிலினிடத்தில் ஆளக்கடவன்.