பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 1

வேண்டிய, பயன் - பயனாவது, சுற்றத்தால் . சுற்றத்தார் களால், தான் - தான், சுற்றப்பட சூழப்பட்டிருக்கும் வகையில், ஒழுகல் . நடந்து அவர்களைத் தழுவி வாழ்தலாகும்.

|கடரை செல்வம் பெற்ற ஒருவன் அதனால் அடையு" பயன் என்னவென்றால் சுற்றத்தார்களால் தான் சூழப்படும் வகையில் தழுவி நடந்து கொள்ளுதலாகும்.

5. கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய

சுற்றத்தால் சுற்றப் படும். 525 |ப-ரை கொடுத்தலும் . சுற்றத்தார்க்குக் கொடுப் பதையும், இன் - இனிய, சொலும் . சொற்கள் சொல்லு வதையும், ஆற்றின் ஒருவன் செய்வானாயின், அடுக்கிய - என்றும் தொடர்ந்து வருகின்ற, சுற்றத்தால் - சுற்றத்தார் களால், சுற்றப்படும் - சூழப்பட்டு:வாழ்வான்.

- |க-ரை ஒருவன் தம் சுற்றத்தார்க்கு வேண்டுவன கொடுத்தலையும், இன்சொல் சொல்லுவதையும் செங் வானானால், தொடர்ந்து பலவகையான சுற்றத்தால் சூழப்படுவான். -

6. பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் - மருங்குடையார் மாகிலத்து இல். 526

இப. ைபெரும் - சிறந்த, கொடையான் - கொடை யாளியாகவும், வெகுளி - சினத்தினை, பேனான். விரும் பாதவனாகவும் இருந்து விட்டால், அவனின்.அவனைவிட, மருங்குடையார் . கிளையென்னும் சுற்றத்தார் உடைய வாகள், மா - இப்பெரிய, நிலத்து இல் - உலகில் இல்லை யாகும். .

|க-ரை ஒருவன் சிறந்த கொடையாளியாகவும்,

கோபத்தினை விரும்பாதவனாகவும் இருப்பானானால், அவனைப் போல கிளை உடையார் இவ்வுலகில் இல்லை.