பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

7. காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உள. 327

(ப-ரை) காக்கை - காக்கைகள், கரவா - மறைத்து. உண்ணாமல், கரைந்து - கூவித் தன் இனத்தை அழைத்து, உண்ணும் . உண்ணுகின்றனவாகும், ஆக்கமும் . செல்வப் பெருக்கமும், அன்ன . அப்படிப்பட்ட, நீரார்க்கே. தன்மை: யுடையவர்களுக்கே, உள- இருப்பதாகும். -

(க-ரை) காகங்கள் தமக்கு இரை கிடைத் திவுடன் அதனை மறைக்காமல் தமது இனத்தை அழைத்து அதனோடு உண்ணும். சுற்றத்தினால் அடையக்கூடிய செல்வங்களும் அ. த் த ன் ைம உடையவர்களுக்கே. உண்டாகும். -

8. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அதுகோக்கி வாழ்வார் பலர். 528,

(ப-ரை) பொது - எல்லோரையும் பொதுப்பட ஒரு தன்மையாராக, நோக்கான் பார்க்காமல், வேந்தன் . வேந்தனானவன், வரிசையா - அவரவருடைய தகுதிக்கு ஏற்றபடி, நோக்கின் - நோக்கி நடப்பானாகில், அது - அச் சிறப்பினை, நோக்கி - கருதி, வாழ்வார் பலர் - அவனைச் சூழ்ந்து வாழ்கின்ற சுற்றத்தார் பலராவார்.

(க-ரை) எல்லோரையும் ஒரே தன்மையராக நோக் காமல், அரசன் அவரவர் தகுதிக்கு ஏற்ப நோக்கிக் கவனிப்பானாகில், அச்சிறப்பு நோக்கி அவனை விடாமல் வாழ்கின்ற சுற்றத்தார் பலராவர். -

9. தமர்ஆகித் தன்துறந்தார் சுற்றம் அமராமைக்

காரணம் இன்றி வரும். 52%.

(ப-ரை: தமராகி - முன்னர் சுற்றத்தாராக் கூடி இருந்து, தன் துறந்தார் . யாதானுமொரு காரணங் கொண்டு பிரிந்து சென்றவர்கள்,சுற்றம் . மறுபடியும் வந்து