பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233

சுற்றமாகுதல், அமராமை - முன்பு பொருந்தாமைக்கு, காரணம் - காரணம், இன்றி . இப்போது தன்னிடம் இல்லாதலால், வரும் - உண்டாவதாகும். -

(க-ரை முன்பு சுற்றத்தாராக இருந்து தன்னோடு. பொருந்தாமல் யாதானுமொரு காரணத்தால் பிரிந்து போனவர், பின்னும் வந்து சுற்றமாகுதல் என்பது முன் பிருந்த பொருந்தாத காரணம் தன்னிடத்தில் இல்லை யாதலால் உண்டாவதாகும்.

10. உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்

இழைத்திருந்து எண்ணிக் கொளல். 530.

(ப-ரை உழைப்பிரிந்து . காரணம் ஒன்றுமில்லாமல் பிரிந்து போய், காரணத்தின் - பின்பு காரணத்தால், வந் தானை - வந்து சேருகின்ற கற்றத்தானை, வேந்தன் . வேந்தனானவன், இழைத்திருந்து பிரியாதிருக்க அக் காரணத்தைச் செய்து அமைத்து, எண்ணிக் கொளல் - ஆராய்ந்தறிந்து சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

(கரை) காரணமின்றித் தன்னைவிட்டுப் பிரிந்து போய்ப் பின் காரணத்தால் வந்த சுற்றத்தானை, வேந்தன் அந்தக் காரணத்தைச் செய்து வைத்து ஆராய்ந்து தழுவிக் கொள்ளுதல் வேண்டும்.

54. பொச்சாவாமை (களிப்பு மிகுதியால் சோர்வு என்னும் மறதி

கொள்ளாதிருத்தல்)

1. இறந்த வெகுளியின் தீதே சிறந்த

உவகை மகிழ்ச்சியின் சோர்வு. 531: (ப-ரை) சிறந்த - மிகுந்த, உவமை மகிழ்ச்சியின் - உவகைக் களிப்பினால் (வருகின்ற) சோர்வு . மறதியானதுசிறந்த அளவு கடந்த, வெகுளியின் . சினத்தினைவிடது. இது - தீமை பயப்பதாகும். - ‘. .