பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235

எல்லாம் இருந்தாலும் கூட, இல்லை . அவற்றால் எந்தப் பயனும் இல்லையாகும்.

(க-ரை) சிறந்த அரண் என்னும் கோட்டை இருந் தாலும்மணத்தில் அச்சம் உடையவர்களுக்கு அதனால் பயன் இல்லை. அதுபோல, செல்வமெல்லாம் உடையவராயினும் மனத்தில் மறதியுடையவர்களுக்கு அதனால் பயனில்லை.

5. முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை

பின்னறு இரங்கி விடும். 535 (ப-ரை) முன்னுற முன்னதாகவே, காவாது - தெரிந்து, தன்னைக் காத்துக் கொள்ளாமல், இழுக்கியான் - மறந்திருந்தவன், பின் . பிறகு, ஊறு துன்பம் வந்துற்ற போது, தன் - தன்னுடைய, பிழை - தவறினை உணர்ந்து,

இரங்கி விடும் . இரக்கப்பட்டு கவலையடைவான்.

(க-ரை வருகின்ற துன்பங்களை முன்னதாகவே அறிந்து காத்துக் கொள்ளாமல் மறந்திருந்தவன், பின்னர் தனது பிழையினை நினைத்து இரங்கிக் கவலைப்படுவான்

6. இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்கா மை

வாயின் அஃது ஒப்பது இல், 536 (புரை இழுக்காமை - மறவாமைக் குணம், யார் மாட்டும் - யாவரிடத்தும், என்றும் - எக்காலத்திலும், வழுக் காமை . ஒழிவில்லாமல், (எப்போதும் வாயின் . வாய்த்து இருக்குமேயானால், அஃது ஒப்பது - அதனை ஒத்த நன்மை,

இல் வேறு எதுவும் இல்லை.

(க-ரை மறவாமைக் குணம் யாவரிடத்தும் எக்காலத் திலும் இடையீடின்றி உண்டாகி விடுமானால், அதனை

யொத்த தன்மை வேறு எதுவும் இல்லை.

7. அரியளன்று ஆகாத இல்லைபொச் சாவாக் -

கருவியான் போற்றிச் செயின். 537 :ப-ரை பொச்சாவா - மறதியில்லாத, கருவியால் " னைத்தினாலே, போற்றிச் செயின் - எண்ணிச் செய்தால்