பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245

பசுக்கள் தருகின்ற, பயன் - பயனாகிய பால், குன்றும் , சுருங்கிவிடும், அறுதொழிலோர் . ஆறுவகைப்பட்ட தொழிலைச் செய்பவர்கள், நூல் மறப்பர் - தாங்கள் கற்கும் நூல்களை, மறப்பர் - மறந்து விடுவார்கள். -

(கரை) காத்தற்குரிய காவலனாக அரசன் உயிர் களைக் காப்பாற்றானாகில் அறம் இல்லாத அவன், நாட்டுப் பசுக்கள் பால் தருவது குறைந்து விடும். ஆறு வகைப்பட்ட தொழிலாளர்கள் தாங்கள் நூல் கற்பதை மறந்து விடுவார்கள். தொழில்கள் நசித்து விடும். .

57. வெருவந்த செய்யாமை

(குடிமக்கள் அஞ்சி நடுங்கக் கூடியவைகளைச் செய்யாதிருத்தல்)

1. தக்காங்கு காடித் தலைச்செல்லா வண்ணத்தால்

ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. 561, (ப-ரை) தக்காங்கு குற்றத்தினை நடுவாக நின்று, நாடி - நல்லபடியாக ஆராய்ந்து, தலைச்செல்லா வண்ணத் தால் - மீண்டும் அப்படிப்பட்ட குற்றத்தினை அவன் செய்யாமற் பொருட்டு, ஒத்தாங்கு - குற்றத்திற்குத் தகுந்த படி, ஒறுப்பது வேந்து - தண்டிப்பவனே வேந்தனாவான்.

(கரை) தக்க முறையில் நடுவாக நின்று ஆராய்ந்து குற்றம் செய்தவன் பின்னும் அதனைச் செய்யாமல் இருக் கும் பொருட்டு அக்குற்றத்திற்குத் தகுந்தபடி தண்டிப் பவனே வேந்தனாவான். .

2. கடிதுஒச்சி மெல்ல எறிக கெடிதுஆக்கம் .

நீங்காமை வேண்டு பவர். 562

(ப-ரை) 4.5ಹಿ - தமது செல்வம், - நெடிது நீண்ட காலம், நீங்காமை - நீங்காதிருக்க வேண்டுமென்று,