பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

247

5. அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் t பேஏய்கண்டு அன்னது உடைத்து. 565

(ப-ரை) அருஞ்செவ்வி.தன்னைக் காண வருவோர்க்கு காண முடியாதபடி அரிதாகவும், இன்னா . இனிமையில் லாத, முகத்தான் முகத்தையுடையவனாகவும், 1இருக் கின்றவனது பெரும் . பெரிய, செல்வம் - செல்வமானது, பேஏய் - பேயால், கண்டன்னது . காணப்பட்டாற்போன்ற தொரு குற்றத்தினை, உடைத்து - பெற்றதாகும்.

(க-ரை தன்னைக் காண வருவோர்க்கு எளிதில் காண முடியாதவனாயும், கண்டால் கடிய முகத்தினையுடையவ னாகவும் இருக்கின்ற மன்னனுடைய செல்வம் பேயால் காணப்பட்டதொரு குற்றத்தினை உடையதாகும்.

6. கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் நெடுஞ்செல்வம் கீடுஇன்றி ஆங்கே கெடும். 566

(ப-ரை) கடும் - கடுமையான, சொல்லன் - சொல் வினையுடையவனும், கண்ணிலன் . கண்ணோட்டம் |இரக்கம்) இல்லாதவனும், ஆயின் ஆனால், நெடும் - பெரிய, செல்வம் - செல்வமானது, நீடு . நீடுதல், இன்றி . இல்லாமல், கெடும் - கெட்டுவிடும்.

(க-ரை) அரசன் கடிய சொல்லினையுடையவனாக வும், கண்ணோட்டம் (இரக்கம்) இல்லாதவனாகவும் இருந் தால், அவனுடைய பெரிய செல்வம் நீடுதலில்லாமல் அப்பொழுதே கெடும்.

7. கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்

அடுமுரண் தேய்க்கும் அரம். 567 (ப-ரை) கடு - கடுமையான, மொழியும் - சொல்லும், ைஅயிகந்த - குற்றத்தின் மிக்க, தண்டமும்-தண்டனையும், வேந்தன் . வேந்தனது, அடும் - பகையினை வெல்லுதற் கேற்ற, முரண் - மாறுபாடு என்னும் இரும்பினை, தேய்க் கும் அரம் - தேய்க்கின்ற அரமாகும்.