பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

ஆகி, அறிந்தவை - அவ்வாறு «× 6ïremrarprnr¢ கேட்டறிந்தவை களிலே, ஐயப்பாடு சந்தேகம், இல்லாத இன். துணிபவனே, ஒற்று ஒற்றனாவான்.

(க-ரை அறியப்பட வேண்டியவர்கள், மறைவாகத் செய்த செயல்களை அவர்க்கு உள்ளாயினரால் கேட்க வல்லவனாகி, கேட்டறிந்த செயல்களிலே பிறகு சந்தேகம் இல்லாதபடி துணிய வல்லவனே ஒற் றானவான்,

8. ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றும்ஒர்

ஒற்றினால் ஒற்றிக் கொளல். 588

(ப-ரை) ஒற்று ஒர் ஒற்றனாலே, ஒற்றி . மறைவா, ஆறிந்து வந்த, தந்த பொருளினையும் - அறிவித, செய்தியினையும், மற்றுமோர் . பின்னும் வேறொரு, ஒற்றினால் - ஒற்றனால், ஒற்றி - அறிந்து கொண்டு, கொளல் ஒத்திருப்பதை உணர்ந்து அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

(கரை) ஓர் ஒற்றன் தெரிந்து வந்து அறிவித்த காரியத் தையும் மற்றொரு ஒற்றன் கொண்டுவந்த செய்தியுடன், ஒப்புமை கண்டு எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

9. ஒற்றுஒற்று உணராமை ஆள்க உடன்மூவர்

சொல்தொக்க தேறப் படும். 589 (ப-ரை ஒற்று ஒர் ஒற்றன், ஒற்று - மற்றொரு ஒற்றனை (ஒருவனையொருவன்) உணராமை ஆள்க - அறியாதிருக்குமாறு செய்க, உடன் மூவர் . வெவ்வேறாக அனுப்பப்பட்ட மூவர், சொல் - சொற்களும், தொக்க . ஒத்திருக்குமானால், தேறப்படும் - அது உண்மையென்று அறியப்படுவதாகும். o (க-ரை) ஒற்றர்களை ஆளும்பொழுது ஒருவரை ஒருவர் அறியாதபடி ஆளுதல் வேண்டும். அவ்வாறுள்ள ஒற்றர்கள் மூவரை வேறு வேறாக ஒரு பொருளினை அறியச்செலுத்தி, அம்மூவர் தருவதும் ஒத்திருந்தால் அது மெய் என்று தெரியப்படும். . r.