பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

255

3. கடாஅ உருவொடு கண்அஞ்சாது யாண்டும்

உகாஅமை வல்லதே ஒற்று. 585.

(ப-ரை) கடாஅ , பிறரால் சந்தேகிக்க முடியாத, உருவோடு - வடிவத்தோடு அமைந்து, கண்ணஞ்சாது. பிறர் தெரிந்து கொண்டு எதிர்த்து நோக்கினால் அஞ்சா மல், யாண்டும் . எவ்வித முறைகளை அவர்கள் செய்தா லும், உகாமை - மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தா திருக்க, வல்லதே ஒற்று - வல்லவனே ஒற்றனாவான்,

(க-ரை அறிதற்குச் செல்லும் ஒற்றன் மற்றவர்களால் சந்தேகிக்கப்படாத உருவத்தோடு பொருந்தி, அவர்கள் சந்தேகித்து, அறியத் தொடங்கினால் அஞ்சாமல் நின்று, பகைவர் என்ன செய்தாலும் மனத்தில் இருப்பதைச் சொல்லாதவனே ஒற்றனாவான்.

6. துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து

என்செயினும் சோர்விலது ஒற்று. 586. |ப-ரை) துறந்தார் . முற்றுந்துறந்த துறவியும், படிவத்தர் - விரத வொழுக்கினரும், ஆகி - ஆகிய தோற்றத்தினராகி, இறந்து - போவதற்கரிய இடங்களுக் கெல்லாம் சென்று, ஆராய்ந்து . அனைத்தையும் ஆராய்ந்து, என் . (ஐயுற்றுப்பிடித்து) எத்துன்பத்தினை, செயினும் . செய்தாலும், சோர்விலது - தன்னை வெளிப்படுத்தாதவனே, ஒற்று ஒற்றன் என்பவனாவான்.

(க-ரை முற்றும் துறந்தவராயும், விரத ஒழுக்கின. சாயும் தோற்றமளித்து அரிய இடங்களில் எல்லாம் புகுந்து ஆய்ந்து, சந்தேகப்பட்டுப் பிடித்து எத் துன்பம்

செய்தாலும் தன்னை வெளிப்படுத்தாதவனே ஒற்றனாவான்.

7. மறைந்தவை கேட்கவற்று ஆகி அறிந்தவை

ஐயப்பாடு இல்லதே ஒற்று. 587'

(ப-ரை) மறைந்தவை - மறைவாக செய்த செயல் களை, கேட்க கேட்டறிவதில், வற்று . வல்லது, ஆஓ