பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

ஞான்றும் - எப்போதும், வல்லறிதல் - ஒற்றர்களால் விரைவில் அறிதல், வேந்தன் - வேந்தனுக்கு தொழில். உரிய தொழிலாகும்.

(கரை) எல்லாரிடத்திலும் நிகழ்கின்ற எல்லா வற்றையும் நாள் தோறும் ஒற்றனால் விரைவில் அறிந்து கொள்ளுதல் வேந்தனுக்கு உரிய தொழிலாகும்.

3. ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன்

கொற்றம் கொளக்கிடந்தது இல். 583,

(ப.ரை ஒற்றினால் ஒற்றர்களாலே, ஒற்றி எல்லா ரிடத்தும் நிகழ்வதை அறிந்து கொண்டு, பொருள். அதனால் அடையும் பயனை, தெரியா மன்னன் -ஆராய்ந் தறியாத மன்னன், கொற்றம் . வெற்றி, கொளக் கிடந்தது . அடையக் கிடந்தது, இல் - பிறிது ஒரு நெறி இல்லையாகும்.

(கரை) ஒற்றராலே எல்லாரிடத்திலும் நிகழ்ந்த வற்றை அறிந்து வருமாறு செய்து அதனால் அடையும் பயனை ஆராயாத மன்னவன், வெற்றியடைவதற்குரிய வழி இல்லை.

4. வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு. அனைவரையும் ஆராய்வது ஒற்று. 584. |ப-ரை தம் - தம்முடைய, வினை - தொழிலினை, செய்வார் . செய்வார்கள், சுற்றம் - சுற்றத்தார், வேண்டா தார் - பகைவர், என்றாங்கு - என்று சொல்லப்பட்ட, அனைவரையும் . எல்லோரையும், ஆராய்வது ஒற்று. ஆராய்பவனே ஒற்றனாவான்.

(கரை) தம்முடைய தொழில் செய்பவர்கள், கற்றத்தார், பகைவர் என்று சொல்லப்பட்ட அனை வரையும் இ சொல் செயல்களால் ஆராய்பவனே ஒற்றனாவான்.