பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

  • |கடரை சோம்பலினை விரும்பி சிறந்த முயற்சியினை மேற்கொள்ளாதவர்கள், நண்பர்களும் பிறரும் கண்டித்துப் பேசி இகழும் சொல்லினைக் கேட்பவராவர். .

8. மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு

அடிமை புகுத்தி விடும். 608

(ப-ரை) மடிமை - மடிமைக் குணம், குடிமைக்கண் - நற்குடியாளனிடம், தங்கின் - இருந்து, விடுமேயானால் tஅவனை) தன் . தன்னுடைய ஒன்னார்க்கு - பகைவரி களுக்கு, அடிமை - அடிமையாகும் நிலைமையினை, புகுத்தி விடும் . உண்டாக்கிவிடும்.

(க-ரை மடியானது நற்குடியில் பிறந்தவனிடத்தில் இருந்துவிடுமானால், அது அவனைத் தன்னுடைய பகைவர் களுக்கு அடிமையாகும் தன்மையினை உண்டாக்கிவிடும்.

9. குடியாண்மை புள் வந்த குற்றம் ஒருவன்

மடியாண்மை மாற்றக் கெடும். 609 (ப-ரை) ஒருவன் - ஒருவன், மடி - மடியினை, ஆண்மை - ஆளும் தன்மையினை, மாற்ற - நீக்கிவிட்டால், குடி - அவனுடைய குடிக்குள்ளும் ஆண் மையுள் - ஆண்மை யினுள்ளும், வந்த வந்த, குற்றம் கெடும் - குற்றங்கள்

கெட் டோடும்.

[க-ரை) ஒருவன் தன்னிடமிருந்து மடியென்னும் சோம்பலினை ஒழித்துவிட்டால், அவனுடைய குடியுள்ளும்

ஆண்மையுள்ளும் வந்த குற்றங்கள் நீங்கி விடும்.

10. மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்

தாஅயது எல்லாம் ஒருங்கு. 610. ப-ரை அடி- தனது அடி அளவினாலே, அளந்தான் . எல்லா உலகத்தினையும் அளந்தவன், தாயது . கடந்த பரப்பு, எல்லாம் - முழுவதையும், மடி - சோம்பல் தன்மை, இலா - இல்லாத மன்ன்வன் - மன்னன், ஒருங்கு - ஒரே காலத்தில் சேர, எய்தும் . அடைந்து விடுவான்.