பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

வந்த அந்தத் துன்பத்திற்கு, இடும்பை படுப்பர் - துன்பத் தினை உண்டாக்கி விடுவர்.

|க-ரை) தொழில், செய்யும்போது இடையில் வந்த துன்பங்களுக்குத் துன்பப்படாதவர்கள், வந்த அத்துன்பங் களுக்குத் துன்பத்தினை உண்டாக்கி விடுவர்.

4. மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. 624 (ப-ரை) மடுத்த - விலக்கித் தடுத்த, வாய் எல்லாம் . வழியான இடங்களில் எல்லாம், பகடு - (வண்டியினை இழுத்துச் செல்லும்) மாடு, அன்னான் - போன்றவனை, உற்ற - வந்தடைந்த, இடுக்கண் - துன்பமானது, இடர்ப் பாடு தானே துன்பப்படுவதை, உடைத்து - உடைய தாகும்.

(க-ரை) விலக்கிய இடங்களில் எல்லாம் வண்டியினைப் பெரு முயற்சியுடன் இழுத்துச் செல்லுகின்ற மாட்டினைப் போல, தொழிலினை முயன்று செய்து கொண்டு போகின்ற வனைத் துன்புறுத்தும் துன்பம், தானே துன்பப்படும்.

5. அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற

இடுக்கண் இடுக்கண் படும். 625 !ப-ரை அடுக்கி . இடைவிடாமல் மேன்மேல், வரின் - வந்து கொண்டிருந்தாலும், அழிவு - தனது உள்ளக் கோட் பாடு கெடுதல், இலான் . இல்லாதவனை, உற்ற - வந்தடைந்த, இடுக்கண் - துன்பமானது, இடுக்கண்படும் . துன்பப்பட்டு மறையும்,

(கரை) இடைவிடாமல் துன்பங்கள் மேன்மேல் வந்தாலும், தன் மனத்தில் உள்ள கோட்பாட்டினை விடாதவனிடம் வந்த துன்பங்கள் தாமே துன்பப்படும்.

8. அற்றேம்என்று அல்லற் படுபவோ பெற்றேம்என்று

ஒம்புதல் தேற்றா தவர். 626 (ப-ரை) பெற்றேம் . செல்வம் பெற்றுள்ளோம், என்று - என்பதை நினைத்து, ஒம்புதல் . (செல்வக் காலத்தில்)