பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

9. இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்

துன்பம் உறுதல் இலன். 629

|ப-ரைi இன்பத்துள் - இன்பம் வந்த போது, இன்பம். அந்த இன்பத்தினை, விழையாதான் - மனத்தால் விரும்பா தவன், துன்பத்துள் - துன்பம் வந்த போதும், துன்பம் . அத்துன்பத்தினை, உறுதல் - மனத்தால் அடைதல், இலன் .. இல்லையாகும்.

(க-ரை தனக்கு இன்பம் வந்தபோது அதனை அனுபவித்து மனத்தால் விரும்பாதவன், துன்பம் வந்த போதும் அதனை அனுபவித்து மனத்தால் வருந்த, மாட்டான்.

10. இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்

ஒன்னார் விழையும் சிறப்பு. 630,

(ப-ரை) இன்னாமை - வந்த துன்பத்தினையே, இன்பம் - இன்பமாகும், என-என்று, கொளின் - கற்பித்துக். கொள்ளுவானானால், தன் - தன்னுடைய, ஒன்னார் . பகைவர், விழையும் - நன்கு மதிப்பதற்குக் காரணமான, சிறப்பு - சிறப்பானது, ஆகும் - அவனுக்கு உண்டாம்.

|க-ரை) ஒருவன் தனக்கு வந்த துன்பத்தினையே இன்பமாகக் கற்பித்துக் கொண்டு இருக்கின்ற தன்மை: யுடையவனானால், அத்தன்மை அவனுடைய பகைவர் களும் நன்கு மதிக்கும் முயற்சியினை அவனுக்கு உண்டாக்கி: விடும்.