பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்க இயல்

64. அமைச்சு

(அமைச்சர்களுடைய கடமைகள் ஆற்றல்கள் முதலியன)

1. கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

அருவினையும் மாண்டது அமைச்சு. 631

(ப-ரை) கருவியும் - தொழில் முடிக்கும் கருவிகளும் - ஏற்ற காலமும், செய்கையும் - செய்யும் வழிமுறையும், செய்யும் அவற்றினால் செய்யப்படும், அரு - அரியதான, வினையும் - தொழிலும், மாண்டது - ஆகியவற்றை நன்கு பொருத்தமாக எண்ண வல்லவனே, அமைச்சு அமைச்ச னாவான்.

(க.ரை) தொழில் செய்யும்போது அதற்கு வேண்டிய கருவிகளும், அதற்கு ஏற்ற காலமும், செய்யும் வகையும், செய்யப்படும் அரிய தொழிலும் ஆகியவற்றை நன்கு எண்ண வல்லவனே அமைச்சனாவான். :

2. வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு. 632 |ப-ரை) வன்கண் . கலங்காத கண்ணையும், குடி-குடி மக்களை, காத்தல் - காப்பாற்றுதலும், கற்று - நீதி நூல் களைக் கற்று, அறிதல் - நன்கு அறிதலும், ஆள்வினை - முயற்சியும், ஐந்துடன் - இந்த ஐந்து பண்புகளுடனே, மாண்டது . சிறப்புடன் திருத்தமாக அமையப் பெற்றிருப் பவனே, அமைச்சு - அமைச்சனாவான்.

(கரை) தொழில் செய்யுங்கால் மனம் தளராமையும், குடிகளைக் காத்தலும் நீதி நூல்களைக் கற்றுநல்லன தியன

தி. தெ.-18