பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

வற்றை அறிதலும், முயற்சியும் ஆகிய இந்த ஐந்தும் சிறப் பாக உடையவனே அமைச்சனாவான். 3. பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்

பொருத்தலும் வல்லது அமைச்சு, 633

ப-ரை பிரித்தலும் . பிரிக்க வேண்டியவைகளைப் பிரித்தலும், பேணி - ஆதரவு தந்து இருக்க வேண்டியவர் களைப் பிரியாமல் போற்றி, கொளலும்-வைத்துக்கொள்ள லும், பிரிந்தாரை..முன்பு பிரிந்தவர்களை, பொருத்தலும்பொருத்த வேண்டின் பொருத்திச் சேர்த்துக் கொள்ளலும், வல்லது அமைச்சு-இவைகளில் வல்லமையாக இருப்பவனே அமைச்சனாவான்.

(கரை) தக்க காலத்தில் பிரிக்க வேண்டியவர்களைப் பிரித்தலும், வேண்டியவர்களை நன்கு ஆதரித்துப் பிரியாமல் வைத்துக் கொள்ளலும், பிரிந்தவர்களைப் பொருத்த வேண்டின் பொருத்தலும் ஆகியவற்றில் வல்லவனே அமைச்சனாவான்.

4. தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்

சொல்லலும் வல்லது அமைச்சு. 634 (ப-ரை தெரிதலும் - யாவற்றையும் ஆராய்ந்து அறித லும், தேர்ந்து - தொழில் முடியும் வகையினை நாடி, செயலும் - செய்தலும், ஒருதலையா - முடிவாகவும் துணி வுண்டாகுமாறும், சொல்லலும் சொல்லுவதிலும், வல்லது அமைச்சு - இவைகளில் வல்லவனே அமைச்சனாவான்.

(க-ரை) செய்தொழிலில் ஆவன ஆராய்ந்து தெரித லும், செய்யும்போது வகைத் திறத்தினை நாடிச் செய்த லும், திட்டமிட்டுச் செய்ய வேண்டியவற்றை முடிவாகச் சொல்லலும் ஆகியவற்றில் வல்லவனே அமைச்சனாவான். 5. அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும் திறன் அறிந்தான் தேர்ச்சித் துணை. 635 - |u-ரை அறன் அறிந்து -அறம் இன்னது என்பதனை அறிந்துதெரிந்து, ஆன்று நிறைந்த கல்வியால், அமைந்த