பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

275

தகுதியாக அமைந்த, சொல்லான் . சொல்லையுடையவ: :னாகி, எஞ்ஞான்றும் . எக்காலத்திலும், திறன் . தொழில் புரியும் திறங்களை, அறிந்தான் - அறிந்த அமைச்சனே, தேர்ச்சித்துணை - தலைவனுடைய ஆலோசனைகளுக்கு இாற்ற துணையாவான்.

(கரை) செய்யவேண்டிய அறம் இன்னது என்று அறிந்து ஏற்ற கல்வியால் அமைந்த சொல்வினையுடையவ னாக, எக்காலத்திலும் தொழில் செய்யும் திறங்களை யுடைய அமைச்சனே ம ன் ன னு க் கு ச் சிறந்த துணையாவான்.

铬。 மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்

யாவுள முன்கிற் பவை, 636

(ப-ரை) மதி - இயற்கையாகவுள்ள அறிவு, நுட்பம் - நுண்ணிய நுட்பத்துடனே, நூலோடு - செயற்கையாகிய நூலறிவினையும், உடையார்க்கு - உடைய அமைச்சர் களுக்கு, அதி - மிகுதிப்பட்ட, நுட்பம் - நுட்பமான ஆலோசனைகள் என்பதாக, முன்நிற்பவை - எதிராக இருக்கக் கூடியவை, யா - எவை, உள - இருக்கின்றன.

(கரை) இயற்கையாகிய துண்ணறிவைச் செயற்கை யாகிய நூலறிவோடு உடைய அமைச்சர்க்கு மிகவும் நுட்பத் தினையுடைய செயல்களாக முன் நிற்பவை யாவை உள?

7. செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து

இயற்கை அறிந்து செயல், 637

(ப-ரை) செயற்கை - நூல்கள் வழிகளால் செய்யும் திறத்தினை, அறிந்த அறிந்திருந்த, கடைத்தும் - இடத் தும், உலகத்து - உலகத்தில், இயற்கை - அவ்வப்போது நடக்கின்ற இயற்கை நிலைமைகளை, அறிந்து செயல் . அறிந்துகொண்டு ஆதனோடு பொருந்தச் செய்தல் வேண்டும். *