பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

(க-ரை நூல்வழிகளால் தொழில் செய்யும் திறங் களை அறிந்தபோதும், அவ்வப்போது நடக்கின்ற உலக இயற்கையினை அறிந்து அதனோடு பொருந்தச் செய்தல் வேண்டும்.

8. அறிகொன்று அறியான் எனினும் உறுதி

உழையிருந்தான் கூறல் கடன், 638;

|ப-ரை) அறி. - அறிந்து சொல்லியவாறு அறிவையும், கொன்று - அழித்து, அறியான் - தலைவனான மன்னன் தானும் அறியாதவன். எனினும் - என்றாலும், (அதனால் மன்னனை விட்டுவிடாமல் உறுதி - உறுதியானவைகளைச் சொல்லுதலும், உழையிருந்தான் - பக்கத்திலிருக்கும் அமைச்சனுடைய, கடன் - கடமையான முறையாகும்.

(கரை) அறிந்து சொல்லியவரது அறிவையும் அழித்து, தலைவன் தானும் அறியாதவனானாலும் அதனால் தலைவனை விட்டுவிடாமல் அக்குற்றம் நீக்கி, உறுதியானவற்றைக் கூறுதல் அமைச்சனுக்கு முறைமை யாகும்.

9. பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்ஓர்

எழுபது கோடி யுறும். 639

|ப-ரை) பக்கத்துள் - பக்கத்திலேயேஇருந்துகொண்டு பழுது . திமையானவைகளைச் செய்ய, எண்ணும் - எண்ணு. கின்ற, மந்திரியின் - அமைச்சர் ஒருவனைவிட, (தலைவ. னுக்கு எதிராக நிற்பவர்) ஒர் - ஒரு எழுபதுகோடி - ஏழாகிய பத்துக் கோடி, தெவ் - பகைவர், உறும் - ஆவர். என்பதாம்.

(க-ரை) பக்கத்திலிருந்து கொண்டே தவறானவற்றை என்ணுகின்ற அமைச்சன் ஒருவன், அரசனுக்கு எதிராக நிற்கும் ஒர் எழுபது கோடி பகைவர்களை விடவும் கொடியவனாவான்.