பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

8. கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு அவைதாம்

முடிந்தாலும் பீழை தரும். 658 (ப-ரை) கடிந்த அறமான நூலோர் விலக்கிய தொழில்களை, கடிந்து - தாமும் கடிந்து நீக்கி, ஒரார் . ஒழிக்காதவராகி, செய்தார்க்கு - பொருள் கருதி செய்தவர் களுக்கு, அவைதாம் . அத்தொழில்கள்தாம், முடிந்தாலும். ஒரு வகையில் முடிந்தாலும், பீழைதரும் - துன்பத் தினையே தரும்.

(கரை) நூலோர் தீயவை யென்று நீக்கிய தொழில் களைப் பொருள் கருதி நீக்காமல் செய்த அமைச்சர்க்கு அவை ஒரு வகையில் முடிந்தாலும் துன்பத்தினையே தரும்.

9. அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் கற்பா லவை, 659 (ப-ரை அழ - பிறர் அழுது இரங்க (வருந்த), கொண்ட தான் சேர்த்துக் கொண்ட, எல்லாம் . பொருள் எல்லாம், அழப்போம் . சேர்த்தவன் அழுது இரங்க அவனை விட்டுப் போய்விடும், நற்பாலவை - நல்ல செயல்களால் வந்தவை, வந்தபொருள்கள் | இழப்பினும் - முன்பு இழந்து விட்டான் என்றாலும், பிற்பயக்கும் - அவனுக்குப் பின்பு வந்து பயனைத் தரும்.

(கரை) ஒருவன் தீய தொழில்களைச் செய்து பிறர் அழுது இரங்கத் தான் கொண்டு சென்ற பொருள் எல்லாம், அவனே இரங்கி அழப் போய்விடும். துரயவழியில் சேர்த்த பொருள் முன்பு இழக்க நேரிட்டாலும் பின்பு வந்து நற் பயனைக் கொடுக்கும்.

10. சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்

கலத்துள்நீர் பெய்துஇரீஇ யற்று. 660 (ப-ரை) சலத்தால் . தீய தொழில்களினால், பொருள். * பொருளினை, செய்து - சேர்த்துக் கொண்டு, ஏமார்த்தல் .