பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

285

அதனைப் பாதுகாத்தல், பசுமண் . பசிய மண்ணாலான, கலத்துள் - பாத்திரத்திற்குள், நீர் . நீரினை, பெய்து - ஊற்றி, இரீஇயற்று . அதனைப் பாதுகாத்தற்கு சமமாகும்.

(க-ரை) தீய தொழில்களால் பொருள் சேர்த்து" அதற்குப் பாதுகாப்புச் செய்தல் என்பது, பச்சை மண் பாத்திரத்திற்குள்ளே நீரைப் பெய்து அதனைப் பாது : காப்பது போலாகும்.

67. வினைத் திட்பம் (தொழில் செய்வதற்கு வேண்டிய மனத்திண்மை)

1. வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

மற்றைய எல்லாம் பிற. - 66] ..."

(ப-ரை வினை - தொழில் செய்வதில், திட்பம் . திண்மையான வலிமை, என்பது - என்று சொல்லப்படுவது, ஒருவன் - செய்கின்ற ஒருவனுடைய, மனத்திட்பம் - மனத்தின் கண் கொண்ட வலிமையேயாகும், மற்றைய - அது இல்லாத மற்ற வல்லமை, எல்லாம் . எல்லாம், பிற . தொழிலுக்கு வலிமையென்று சொல்லப்படுபவை அல்லவாம், .

(கரை) தொழில் செய்யும்போது திண்மையென்று : சொல்லப்படுவது அதனை முடித்தற்குரியவனுடைய மனத் திண்மையேயாகும். அதுவல்லாத மற்றவையெல்லாம். திண்மையென்று சொல்லப்பட மாட்டாவாம்.

2. ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்

ஆறு என்பர் ஆய்ந்தவர் கோள். 662 : (ப-ரை ஆய்ந்தவர் கோள் - நீதி நூல்களை அறிந்த வரது துணிவு, (என்னவென்றால் ஊறு - பழுதுண்டாகும் வினைகளை, ஒரால் . செய்யாதிருத்தலும், உற்றபின் -