பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

293

|க்கரை) தொழில் செய்பவன் தன் நண்பர்களுக்கு இனியன செய்வதைக் காட்டிலும் விரைவாகச் செய்ய வேண்டியது என்னவென்றால், தன் பகைவரோடு பகைவ: ராக இருப்பவர்கவைத் தனக்கு நட்பாக்கிக் கொள்ளுத ாைகும்.

10. உறைசிறியார் உள்கடுங்கல் அஞ்சிக் குறைபெறின்

கொள்வர் பெரியார்ப் பணிந்து. 680}

(ப-ரை) உறை ஆளும் இடம், சிறியார் . சிறியரான வர்கள், தம்மைவிட வலியவர் தாக்கிய போது) உள் - தமது நாட்டின் பகுதிகள், நடுங்கல் அஞ்சி நடுங்குவதைக் கண்டு அஞ்சி, குறைபெறின் - வாய்ப்புக் கிட்டுமானால், பெரியார் . அவ்வாறு பெரியாராயினோரை, பணிந்து கொள்வர் . தாழ்ந்து அதனை ஏற்றுக் கொள்வர்.

(கரை) சிறிய நாட்டின் அமைச்சரி தம்மின் வலிய வரால் எதிர்க்கப்பட்டபோது தம்முடைய பகுதிகள் நடுங்குவதற்கு அஞ்சி, அந்நிலைக்கு வேண்டுவதான வாய்ப்பு உண்டானால் அவுரைத்தாழ்ந்து அதனை ஏற்றுக் கொள்ளு வார்கள். - *

69. தூது (தூது செல்வோர் தன்மைகள்).

1 அன்புஉடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்து அவாம்

பண்புஉடைமை தூதுஉரைப்பான் பண்பு. 68?

(ப-ரை) அன்புடைமை - அன்புடையவனாக இருத்த லும், ஆன் ற - சிறந்த உயர்ந்தோர். குடிப்பிறத்தல் - குடி யில் பிறத்தலும், வேந்து மன்னர், அவாம். விரும்பும், பண்புடைமை குணமுடையவளாக இருத்தலும், துளது . தூதுவனாகச் சென்று, உரைப்பான் - செய்தி சொல்லு வோனுக்கு, பண்பு - நற்பண்புகளான இலக்கணமாகும்,