பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.94

(கரை) எல்லோரிடத்திலும் அன்புடையவராக இருத் தலும், உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருத்தலும், வேந்தன் விரும்புகின்ற பண்புடையவராக இருத்தலும் ஆகிய இத் தன்மைகள் தூது செல்வோர்க்குரிய இலக்கணமாகும்.

2. அன்பு:அறிவு ஆராய்ந்த சொல்வன்மை

துாதுஉரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று. 682

(ப. ரை) அன்பு தலைவனிடத்தில் அன்பும், அறிவு . நிறைந்த அறிவுடைமையும். ஆராய்ந்த ஆராய்ந்தறிந்த, சொல்வன்மை . எடுத்துச் சொல்லும் சொல்வன்மையும், தூது தூதுவராகச் சென்று. உரைப்பார்க்கு - உரைப்பவர் களுக்கு, இன்றியமையாத மூன்று - இருந்து ஆக வேண்டிய மூன்று குணங்களாகும்.

(கடரை) மன்னரிடம் நிறைந்த அன்புடைமையும், அறிவுடைமையும், ஆராய்ந்து சொல்லும் வன்மையும் என துண்துரைப்பார்க்கு இன்றியமையாத குணங்கள் மூன்று.

3. நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்

வென்றி வினையுரைப்பான் பண்பு. 683 (பரை) வேலாருள் . வேலினையுடைய வேற்றர சரிடம் சென்று, வென்றி . தனது தலைவனுக்கு வெற்றி யைத் தேடித் தருகின்ற, வினையுரைப்பான் . துாதாகிய தொழிலின் மேல் செல்லுகிறவனுக்கு. பண்பு - இலக்கணம் எனப்படுவது, நூலாருள் . நீதி நூற்களைக் கற்றபல அமைச்சருக்குள், நூல் - தான் இந்நூல்களுள், வல்லன் . வல்லவனாக இருத்தலாகும்.

(க-ரை) வேலினையுடைய வேற்றரசனிடம் சென்று தம் அரசனுக்கு வெற்றியைத் தரும் தொழில் சொல்வானுக்கு "இலக்கணமாவது, நீதி நூல்களைக் கற்ற அமைச்சருக்குத் தான் அவற்றில் வல்லவனாதல். -