பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

299

|க-ரை) தம் மன்னர் விரும்புவளவற்றைத் தாம் விரும்பாதிருத்தல் .ே வ ண் டு ம். அவ்வாறிருத்தல் அமைச்சர்க்கு மன்னராலே நிலைபெற்ற செல்வத்தினைக் கொடுக்கும்.

3. போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்

தேற்றுதல் யார்க்கும் அரிது. 693

fப-ரை: போற்றின் அமைச்சர் தம்மைத் தாமே காக்க விரும்பினால், அரியவை . பொறுத் தற்கரிய கும் மசி களை, போற்றல் . தம்மிடம் உண்டாகாமல் காத்துக் கொள்ளுதல் வேண்டும், கடுத்தபின் - மன்னர் ஐயம் கொண்டு விட்டால் பிறகு, தேற்றுதல் - அந்த மன்னரைத் தெளிவு படுத்துதல், யார்க்கும் அரிது . எவர்க்கும் அரிதான காரியமாகிவிடும். , -

(கரை) அமைச்சர் தங்களைக் காத்துக் கொள்ள நினைத்தால் அரிய பிழைகள் தம்மிடம் வராமல் காத்தல் வேண்டும். அவை வந்ததாகக் கேட்டு அரசன் சந்தேகப் :பட்டுவிட்டால் அவ்வரசரைப் பிறகு தெளிவுப் படுத்துதல்

யாவர்க்கும் அரியதாகும்.

4. செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியா ரகத்து. 694

(ப-ரை) ஆன் ற - பெருமை பெற்ற, Quiilaurrfi - பெரியார்களின், அகத்து . மத்தியில் இருக்கும்போது, செவிச் சொல்லும் . ஒருவன் மற்றவன் காதில் சொல்லு வதையும், சேர்ந்த . ஒருவனைப் பார்த்து மற்றவன், நகையும் - சிரிப்பதையும், அவித்து . தவிர்த்து விட்டு, ஒழுகல் . நடந்து கொள்ளுதல் வேண்டும்.

(க-ரை) ஆன்ற பெரியோர்கள் அருகில் தாம் இருக்

கும்போது அவருக்குத் தெரியுமாறு ஒருவருக்கொருவர் காதிலே சொல்லுவதும், ஒருவர் முகம் நோக்கி மற்றவர்