பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

fகரை) தன் உயிருக்கு முடிவினைத் தருவதாக இருந்தாலும் அதற்கு அஞ்சாமல் தனது தலைவன் சொல்லியபடியே வேற்று அரசனுக்குச் சொல்ல வேண்டிய வற்றைச் சொல்லுபவனே தூதனாவான்.

70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் |அமைச்சர் அரசரைப் பொருந்தி கடந்து கொள்ளுதல்)

1. அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். 691 |ப-ரை இகல் (விரைவில் கோபம் கொள்ளும்) மாறு பாட்டினையுடைய, வேந்தர் சேர்ந்து வேந்தரிடம் சேர்ந்து, ஒழுகுவார் - பழகும் அமைச்சர், அகலாது . அதிகமாக நீங்கி விடாமலும், அணு காது - மிகவும் நெருங்கி விடாமலும், தீ - தீயில், காய்வார் . குளிர்காய்பவர், போல்க - போன்று இருத்தல் வேண்டும்.

(க-ரை விரைவில் கோபித்துக் கொள்ளும் இயல் புடைய மாறுபாடுடைய வேந் தர்களைச் சேர்ந் தொழுகும் அமைச்சர் அவரிடமிருந்து மிக நீங்காமலும் மிக நெருங்கா மலும், தீக்காய் வார் போல இடையிலே நின்று பழகுதல் வேண்டும்.

2. மன்னர் விழைய விழையாமை மன்னாள்

மன்னிய ஆக்கம் தரும். 692 (டி-ரை மன்னர் . தமது மன்னர், விழைப ஆவலுடன் விரும்புவனவற்றை, விழையாமை - தாமும் விரும்பாதிருத்தல் வேண்டும், மன்னரால் அத்தகைய குணம்) அம்மன்னராலே, மன்னிய . நிலைபெறுதலை அடைய, ஆக்கம் தரும் . செல்வாக்கினைத் தமக்குத் தருவதாகும்.