பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

301

3. வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்

கேட்பினும் சொல்லா விடல். t 697

(ப-ரை) வேட்பன. சொல்லி - பயனுள்ளதான விரும்பு வனவற்றைச் சொல்லி, எஞ்ஞான்றும் - எப்போதும், வினையில - பயனில்லாதவற்றை, கேட்பினும் - அரசனே விரும்பிக் கேட்டாலும், சொல்வா சொல்லாமல், விடல் - விட்டு விடுதல் வேண்டும்.

(கரை) அரசன் விரும்புபவையும், பெரிய பயனுள்ள வையுமானவற்றை அவன் கேட்டிலனாயினும் சொல்ல வேண்டும்; எப்போதும் பயனில்லாதவற்றை அரசன் தானே கேட்டாலும் சொல்லாதிருக்க வேண்டும். -

8. இளையர் இனமுறையர் என்றுஇகழார் கின்ற - - ஒளியோடு ஒழுகப் படும். 698 (ப-ரை) இளையர் - தம்மைவிட வயதில் இளையர், இன - தமக்கு இன்ன இனத்தினது, முறையர் - முறையினை யுடைய உறவினர், என்று . என்பதாகக் கூறி, இகழார் . தாழ்வாக அவமதிக்காமல், நின்ற - நிலை பெற்ற, ஒளியோடு - மன்னர்க்குப் பொருந்திய மேலான சிறப்புடனே, ஒழுகப்படும்.மன்னரிடம் நடந்துகொள்ளுதல் வேண்டும்; ' - - - -

|க-ரை) இவர் நமக்கு இளையவர் என்றும், இன்ன முறையில் இனத்தவர் என்றும், அரசரை அவமதிக்காமல் அவ்வரசுக்குள்ள உயர்ந்த நிலைக்குப் பொருந்த அமைச்ச ரானவர் நடந்து கொள்ளுதல் வேண்டும். -

9. கொளப்பட்டேம் என்றுஎண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கு அற்ற காட்சி யவர். 699 (ப-ரை) துளக்கற்ற மாறுதலின்றி நிலைபெற்ற, காட்சியவர் . அறிவினையுடையவர்கள், கொளப்பட்டேம். அரசரால் நன்கு மதிக்கப்பட்டு விட்டோம், என்று . என்ப