பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

தாக, எண்ணி நினைத்து, கொள்ளாத அரசன் விரும்பாதவைகளை, செய்யார் . செய்யமாட்டார்கன்.

|க-ரை நிலைபெற்ற அறிவினையுடையவர்கள், அரசனால் நாம் நன்கு மதிக்கப்பட்டுள்ளோம் என்று. கருதி அவன் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்கள்.

10. பழையம் எனக்கருதிப் பண்பு அல்ல செய்யும்

கெழுதகைமை கேடு தரும். 700.

|ப-ரை) பழையம்-தலைவர்க்கு யாம் பழமையானவர் கள், என - என்று, கருதி - நினைத்து, பண்பு - தமக்கு ஏற்பன, அல்ல - அல்லாதவற்றை, செய்யும் செய்கின்ற, கெழுதகைமை - பழமையாய் வந்த உரிமையானது, கேடு - தீமையினை, தரும் - கொடுத்துவிடும்.

|கடரை) அரசனுக்கு யாம் பழையவர்கள் என்று. கருதித் தமக்கு இயல்பல்லாதவற்றைச் செய்யும் உரிமை அமைச்சர்க்குக் கேட்டினைப் பயப்பதாகும்.

71. குறிப்பு அறிதல் (ஒருவர் கூறாமலேயே அவர் மனத்தில் உள்ளதை அறிதல்)

1. கூறாமை நோக்கிக் குறிப்பு:அறிவான் எஞ்ஞான்றும்

மாறார்ே வையக்கு அணி, 70 fo

(ப-ரை) குறிப்பு - குறிக்கப்பட்ட தொழிலினை, கூறாமை - சொல்லாமலேயே, நோக்கி - முகத்திலும் கண்ணிலும் நோக்கி, அறிவான் . அறிகின்ற ஆற்றல் உள்ளவன், எஞ்ஞான்றும் - எப்போதும், மாறா - வற்றாத, நீர் . நீரினால் (கடலால் குழப்பட்ட, வையக்கு அணி -- உலகில் உள்ளவர்களுக்குச் சிறந்த அணிகலன் ஆவான்.