பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

303

(க-ரை அரசன் குறித்த கருத்தினை அவன் கூறாக லேயே முகத்தினாலும் கண்ணினாலும் நோக்கி அறியும்" ஆற்றல் உள்ளவன் எப்போதும் கடலால் சூழப்பட்ட வையகத்தில் வாழ்பவர்களுக்கு ஒர் ஆபரணம் ஆவான்.

2. ஐயப் படாஅது அகத்தது உணர்வானை

தெய்வத்தோடு ஒப்பக் கொளல். ፕ02 . :ப-ரை) அகத்தது . ஒருவனுடைய மனத்தில் நிகழ்வ தனை, ஐயப்படாது - யாதொரு சந்தேகமுமின்றி, உணர் வானை . உறுதியாக அறிய வல்லவனை, தெய்வத்தோடு .. தெய்வத்திற்கு, ஒப்ப - சமத்துவமாக, கொளல்.கொண்டு மகிழ்தல் வேண்டும்.

(கரை) ஒருவன் மனத்தில் உள்ளதைச் சந்தேகமின்றி. உணரவல்ல ஒருவனை, மக்களில் அவன் ஒருவனே பானாலும் தெய்வத்தோடு ஒப்ப நன்கு மதித்தல் வேண்டும்.

3. குறிப்பின் குறிப்பு:உணர் வாரை உறுப்பினுள்

யாது கொடுத்தும் கொளல். 703 (ப-ரை) குறிப்பின் தன்னிடம் குறிப்பு நிகழ்வதை யறிந்து, (அது கொண்டு குறிப்பு . பிறர்பால் நிகழும் குறிப்பினை, உணர்வாரை - அறியும் தன்மையாளரை, உறுப்பினுள் - அரசர் தனது உறுப்புக்களுள், பாது . அவர் வேண்டுவதொன்றனை, கொடுத்தும் . கொடுத்தாகிலும், கொளல் - துணையாகக் கொள்ளுதல் வேண்டும்.

(க.ரை! தன்னுடைய குறிப்பு நிகழ்வதை அறிந்து அதனால் பிறனுடைய குறிப்பினை அறியும் தன்மை யாளரை, அரசர் தம் உறுப்புக்களுள் அவர் வேண்டு வ தொன்றனைக் கொடுத்தாகிலும் துணையாக வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

4. குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை

உறுப்புஒரணையரால் வேறு. - 704. (வரை) குறித்தது கூறாமை - ஒருவன் மனத்தில் கருதியதனை அவன் கூற வேண்டாமலேயே, கொள்ளுவா