பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316

இறைப் பொருள், ஒருங்கு - முழுவதையும், நேரிவது .

கொடுப்பதே, நாடு - நாடாகும்.

|க.ரை) பிற நாடுகள் பொறுத்த பாரமெல்லாம் தன்

மீது வந்தாலும் அவற்றைத் தாங்கி அதற்குமேல்

அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் கொடுப்பதே

நாடாகும்.

4. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேராது இயல்வது நாடு. 734

(ப-ரை) உறு . மிகுதியான பசி - பசியும், ஒவா -

நீங்காத, பிணியும்-நோயும், செறு - அழிவினைச் செய்யும்

பகை - பகையும், சேராது - இல்லாமல், இயல்வது - இனிது நடப்பதுவே, நாடு-நாடாகும்.

(க-ரை) மிக்க பசியும் நீங்காத நோயும், அழிவினைத் தரும் பகையும் இல்லாமல் இனிதாக நடப்பதுவே நாடாகும். - *

5. பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு. 735

(ப-ரை பல் பற்பல காரணங்களால் உண்டாகும், குழுவும் . கூட்டங்களும், பாழ்செய்யும் உடனிருந்தே பாழாக்குகின்ற, உட்பகையும் - உட்பகையினரும், வேந்து. சமயம் வந்தபோது வேந்தனை, அலைக்கும். அலைக்கின்ற, கொல் - கொலைத்தொழில் புரிகின்ற, குறும்பும் . குறும்பர் களும், இல்லது இல்லாமல் இருப்பதே, நாடு - நாடாகும்.

(கரை) பற்பல காரணங்களால் மாறுபட்டுக் கூடும் கூட்டங்களும், உடனிருந்தே பாழாக்கும் உட்பகையும், _சமயம் வந்தால் வேந்தனை அலைக்கின்ற கொலைத் * தொழில் குறும்பரும் இல்லாததே நாடாகும். *...,