பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

317

6. கேடுஅறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா

நாடுஎன்ப நாட்டின் தலை. 736.

(ப-ரை) கேடு - பகைவரால் சுெடுதல் என்பதனை, அறியா - அறியாததாய், கெட்ட விடத்தும் - கெட்ட காலத்திலும், வளம் . தனது வளப்பம், குன்றா - குன்றாத நாட்டினை, நாட்டின் - எல்லா நாடுகளிலும், தலை என்ப. முதன்மையானதென்று நூலோர் கூறுவார்கள்.

(க.ரை பகைவரால் கெடுதல் என்பதனை அறியாத தாய், கெட்டுப் போன காலத்திலும் தனது வளம் குன்றாத . நாட்டினை எல்லா நாடுகளிலும் தலையானது என்று நூலோர் கூறுவர்,

7. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்

வல் அரணும் காட்டிற்கு உறுப்பு. 737s."

(ப-ரை) இரு - கீழ்நீர், மேல்நீர் என்ற இருவகை, புனலும் . நீரும்,வாய்ந்த - வாய்ப்புடைத்தான (வளமான மலையும் . மலைகளும்,வருபுனலும் அவைகளிலிருந்து வரும் நீரும், வல் - அழியாத வலிமையுடைய, அரணும்-அரணும், . [கோட்டையும்iநாட்டின் உறுப்பு - ஒரு நாட்டிற்கு உறுப்புக் களாகும்.

(க-ரை) கீழ்நீர், மேல்நீர் எனப்பட்ட நீரும், வாய்ப்பான மலையும், அதிலிருந்து வரும் நீரும், அழியாத . அரணும் நாட்டிற்கு உறுப்புக்களாகும்.

8. பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்

அணி என்ப நாட்டிற்கு இவ்வைந்து. 738".

(ப-ரை) பிணி - நோய், இன்மை - இல்லாமையும், செல்வம் - செல்வமும், விளைவு - நல்ல விளைச்சலும், இன்பம் - இன்பமும், ஏமம் - பாதுகாவலும், இவ்வைந்து . இந்த ஐந்தினையும், நாட்டிற்கு - ஒரு நாட்டிற்கு அணி என்.ப - அழகாகும் என்று நூலோர் கூறுவர்.