பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75. அரண்

(நாட்டிற்குச் சிறப்பான அரண் - கோட்டை - விளக்கப்படுதல்)

1. ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்

போற்று பவர்க்கும் பொருள். 74.1 (ப-ரை) ஆற்றுபவர்க்கும் - (பலவகை ஆற்றலுடைய ராய். பகைவர் மேல் படையெடுத்துச் செல்வார்க்கும், அரண் - அரணானது, பொருள் - சிறந்த பொருளாகும், அஞ்சி - தம் மேல் வரும் பகைவர்க்குப் பயந்து, தற்போற்று பவர்க்கும் - தன்னை வந்து அடைபவர்களுக்கும், பொருள் - அரண் சிறப்புடையதாகும்.

(க-ரை பலவகை ஆற்றலும் உடையவர்களாகப் பகைவர்மேல் செல்லுவோர்க்கு அரண் சிறந்ததாகும். அதுவேயன்றித் தம்மேல் வருவோர்க்கு அஞ்சித் தன்னை அடைவார்க்கும் அரண் சிறந்ததாகும்.

2. மணிநீரும் மண்ணும் மலையும் அணிகிழற்

காடும் உடையது அரண். 742 (ப.ரை) மணி - மணி போலும் நிறத்தினையுடைய, நீரும் . நீரும், மண்ணும் - வெள்ளிடை நிலமும், மலையும் . மலையும், அணி - குளிர்ந்த, நிழற்காடும் - நிழலையுடைய காடும், உடையது - உடையதே, அரண் - அரணாகும்.

(கரை) மணிபோலும் நிறத்தினையுடைய நீரும், வெள்ளிடை நிலமும், மலையும், குளிர்ந்த நீரையுடைய

காடும் உடையதே அரணாகும். - -

3. உயர்வு அகலம் திண்மை அருமைஇந் நான்கின்

அமைவுஅரண் என்று உரைக்கும் நூல். 743 (ப-ரை) உயர்வு - நல்ல உயர்ச்சியும், அகலம் - அகல மும், திண்மை - வலிமையும், அருமை - பொறிகளால்