பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

325

(க-ரை) குடிகளிடம் .ெ கா எண் ட அருளுடைமை ஆயினாலும், அன்புத் தன்மையினாலும் வாராத பொருள் பெருக்கத்தினைப் பொருந்தாராகிக் கழிய விடுதல் வேண்டும்,

6. உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்

தெறுபொருளும் வேந்தன் பொருள். 756.

(ப-ரை) உறு - 1உடையவர் இல்லாமையால் அரசுக்கு வந்த, பொருளும் . பொருளும், உல்கு - சுங்க வரிகளால், பொருளும் - வந்த பொருளும், தன் - தனது, ஒன்னார் - பகைவர்களை, தெறுபொருளும் . வென்றதால் திறையாக வந்த பொருளும், வேந்தன் வேந்தனுக்குரிய, பொருள் - பொருள்களாகும்.

(க-ரை) உடையவர் இல்லாததால் தானே வந்த பொருளும், சுங்கமாகிய பொருளும் தம் பகைவரிடமிருந்து திறையாகக் கொள்ளும் பொருளும் வேந்தனுக்கு உரிய பொருள்களாகும்.

7. அருள் என்னும் அன்பு:ஈன் குழவி பொருள் என்னும்

செல்வச் செவிலியால் உண்டு. 757 (ப-ரை) அன்பு - அன்பானது, ஈன் - பெற்ற, அருள் . அருள், என்னும் - எனப்படும், குழவி - குழந்தையானது, பொருள் என்னும் . பொருள் என்று சிறப்பித்துக் கூறப் படும், செல்வம் - செல்வமாகிய, செவிலியால் - செவிலித் தாயாரால், உண்டு வளர்வதாகும்.

(க-ரை அன்பு பெருகி அதனால் வந்த அருள் என்னும் குழவி, பொருள் என்னும் உயர்த்திச் சொல்லப்படும் செல்வத்தினையுடைய செவிலியால் வளரும். 8. குன்றுஏறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்துஒன்று உண்டாகச் செய்வான் வினை. 758 (பட்ரை) தன் - தன்னுடைய, கைத்து - கையிலே பொருள், உண்டாக - உளதாயிருக்க, ஒன்று செய்வான் -