பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326

ஒரு தொழிலினைச் செய்பவனது, வினை - செயலானது, குன்று - குன்றின்மீது, ஏறி - ஏறிநின்று, யானைப்போர் . யானைகள் போரிடுவதை, கண்டற்று . காண்பதற்குச் சமமாகும்.

|க-ரை) தன் கையில் பொருளினை வைத்துக்கொண்டு: ஒரு தொழிலினை எடுத்துச் செய்தல், ஒருவன் மலைமேல் ஏறிநின்று யானைப் போரினைக் கண்டதை ஒக்கும்.

9. செய்க பொருளைச் செறுகர் செருக்கு அறுக்கும்

எஃகு அதனிற்கூரியது இல். 759.

(ப-ரை) பொருள் செல்வத்தினை, செய்க .. உண்டாக்கிக் கொள்ளுவார்களாக, செறுநீர் - தமது பகை வரது, செருக்கு அறுக்கும்.செருக்கினை அறுத்து விடுகின்ற, எஃகு - கருவி, அதனின் - அதுபோன்று, கூரியதுஇல் . கூர்மையான படைக்கலம் வேறு எதுவும் இல்லையாகும்.

(க-ரை) தமக்கு ஒன்று உண்டாகக் கருதுபவர்கள்

பொருளினை உண்டாக்குதல் வேண்டும். தமது பகைவர்

செருக்கினை அறுக்கும் படைக்கலம் அதுவேயாம். அதற்கு அதுபோலக் கூரிய படைக்கலம் பிறிது இல்லை.

10. ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு. 760,

(ப-ரை ஒண். நல்வழியில் இருப்பதான, பொருள் . செல்வத்தினை, காழ்ப்ப - மிகுதியாக, இயற்றியார்க்கு - உண்டாக்கிக் கொண்டவர்க்கு, ஏனை மற்றைய அறமும் இன்பமுமான, இரண்டும் - இரண்டும், ஒருங்கு ஒருங்கு. சேர்ந்து, எண் . எளிமையாக வந்தடையும், பொருள் . பொருள்களாகும். -

(க-ரை நல்ல வழியில் வளரும் பொருளினை மிகுதி: மாகப் படைத்தவர்க்கு மற்றையதான அறமும் இன்பமும் ஒன்றாக அடைவதற்கு எளிய பொருள்களாகும்.